இனி யூடியூபில் இனவெறி வீடியோக்களுக்கு தடை..!அதிரடியில் இறங்கிய யூடியூப்
உலகளவில் பெறும் வரவேற்பை பெற்ற இணையதளமாக யூடியூப் உள்ளது.தற்போது யூடியூப் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனவெறி தொடர்பான விடியோக்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தனது அறிக்கையில் வெளியிட்டில் தெரிவித்துள்ளது.இதனால் எதிர்மறையான வெறுப்பு பேச்சு கொள்ளைக்கு யூடியூப் இடம் அளிக்காது என்று தெரிவித்துள்ளது.
மேலும் இதனை செய்படுத்த சில மாதங்கள் ஆகும் ஆனால் முற்றிலும் தடை செய்யும் நோக்கில் தான் யூடியூப் நிறுவனம் உள்ளது என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம் யூடியூப்பின் இந்த புதிய கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் யூடியூப் இந்த அதிரடி நடவடிக்கையானது நியுசிலாந்தில் மசூதி ஒன்றில் நடந்த தாக்குதல் யூடியூபில் நேரலையாக ஒளிப்பரப்பட்டது.
இதனால் உலக நாடுகள் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வந்தனர்.இதனால் சமூக வளைதலங்கள் தாமக முன்வந்து நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் யூடியூப் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது