யூடியூப்பில் இனி இந்த வீடியோக்களை வெளியிடாதீர்கள்!ப்ளாக் செய்யும் யூடியூப்…..
யூடியூப் பிரச்சாரம் சார்ந்த அரசு ஆதரவுடன் வெளியாகும் வீடியோக்களை ப்ளக் (black) செய்யத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, முந்தைய அரசுக்கு எதிராகவும், டிரம்பை அதிபராக்கும் முயற்சியிலும் ரஷ்ய அரசு நிதியில் இயங்கும் ரஷ்யா டுடே என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக ஏற்கெனவே ஏராளமானோரை டிவிட்டர் நிறுவனம் பிளாக் செய்துவிட்ட நிலையில், யுட்யூப் வீடியோக்கள் மீதும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, பிரச்சாரங்கள் கொண்ட வீடியோக்களை தமது ஊழியர்களைக் கொண்டு ப்ளக் (black) செய்யத் தொடங்கியுள்ளதாக யூ டியூப் தெரிவித்துள்ளது. ப்ளாக் (black) செய்யப்பட்ட வீடியோக்கள் யூடியூபில் பார்வைக்குக் கிடைக்காது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.