ஐபோனினை தொடாமலேயே அவற்றை இயக்க முடியும்..! புதிய தொழில்நுட்பம்..!
ஆப்பிள் நிறுவனம், ஐபோனினை தொடாமலேயே அவற்றை இயக்க வழி செய்யயும் வகையில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் எனும் புதிய தொழில்நுட்பத்தை விரைவில் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு அம்சங்கள் எதிர்கால ஐபோன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தை எதிர்கால ஐபோன்களுக்க வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இனிவரும் ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் உடன் வளைந்த கண்ணாடி திரைகளை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் உலகம் முழுவதும் அதி வரவேற்பை பெற்றுள்ளது ஐபோன்கள் ஆனால் விலை தான் சற்று உயர்வாக இருக்கும்.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனர் ஸடீவ் ஜாப்ஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் மவுஸ் சாதனத்தை அதிகம் பிரபலபடுத்தினார், மேலும் ஐபோன்களில் இருக்கும் 3டி டச் தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் இப்போது உருவாக்கிவரும் ஐபோன் டிஸ்ப்ளேக்கள் திரையின் மேல்புறத்தில் இருந்து உள்புறமாக வளையும் அம்சத்துடன் வெளிவரும் எனத் தகவல் இது தற்போதைய சாம்சங் ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமானதாகும்.
ஐபோன் X மாடலின் OLED ஸ்கிரீன் கீழ்புறமாக வளைந்திருந்தாலும், மனித கண்களுக்கு தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக எல்சிடி டிஸ்பிளேக்களை விட ஒஎல்இடி ரக டிஸ்பிளேக்களை எளிதில் வளைக்கவோ அல்லது மடிக்கவோ முடியும், ஆனால் வளையும் தன்மை கொண்ட ஐபோன்களை வெளியிட மூன்று ஆண்டுகள் வரையாகும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.