சியோமி  எம்ஐ டிவி 4 எ(A) சீரீஸில் இந்தியாவில் அறிமுகம்?

Default Image

சியோமி  எம்ஐ டிவி 4A சீரீஸில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிநவீன திரையை கொண்டுள்ள இதில், 32 இன்ச், 43 இன்ச் என 2 மாடல்களில் கிடைக்கும்.

இதில் ஆண்ட்ராய்டு சார்ந்த ஃபேக்ட்ச்வல் யூசர் இண்டர்பேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

32 இன்ச் டிவியின் விலை, 13,999 ரூபாய் மற்றும் 43 இன்ச் அளவு திரை கொண்ட டிவி 22,999 ரூபாய் என விலை நிரண்யிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விற்பனை வரும் 13-ம் தேதியிலிருந்து துவங்குகிறது.

அம்சங்கள்: 43 இன்ச் மாடலில் குவாட்-கோர் 64-gpl & HLG மற்றும் HDR 10-ஐ ஆதரிக்கும் Amlogic T962 உடன் கூடிய 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டதாக வரவுள்ள இந்த மாடலில் வை-ஃபை 802.11ac (2.4/5 GHz dual-band Wi-Fi), ப்ளூடூத் 4.2 மற்றும் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோ போன்ற அம்சங்களை பெற்றிருக்கும்.

32 இன்ச் மாடல், எல்இடி திரையுடன் 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் 962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் – மாலி-450 எம்பி3 ஜிபியு கொண்டு விளங்கும் மாடலில் கூடுதல் அம்சங்களாக வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் பெற்றிருக்கும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விற்பனை செய்யப்படும் போது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 2200 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்