இன்று களமிறங்கும் சியோமியின் 14 சீரிஸ்.! விலை என்ன தெரியுமா.?

Xiaomi 14 series

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தக்கூடிய நிறுவனங்களில் முதன்மையாக இருக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று சீனாவில் மாலை 7:00 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30) வெளியிடவுள்ளது.

இதனுடன் அதன் புதிய தயாரிப்புகளான ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக 14 சீரிஸின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டிப்ஸ்டர் இஷான் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சியோமி 14 சீரிஸ்

இந்த 14 சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து வெளியான தகவலின் படி, சியோமி 14-ல் 1.5K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.36 இன்ச் ஓஎல்இடி எல்டிபிஓ பிளாட் டிஸ்பிளே பொருத்தப்படலாம். டால்பி விஷன் சப்போர்டுடன் கூடிய இந்த டிஸ்பிளே 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கலாம்.

சியோமி 14 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் கர்வ்டு டிஸ்பிளேக்கு பதிலாக பிளாட் டிஸ்ப்ளே பயன்படுத்தப்படலாம். அதாவது, 2K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் அளவுள்ள பிளாட் அமோலெட் டிஸ்பிளே இருக்கலாம். அதோடு 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் வரலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடலில் இருக்கக்கூடிய பிராசஸரைப் பொறுத்தவரையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன்கள் புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

அதோடு, ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட எம்ஐ ஓஎஸ்-க்கு பதிலாக புதிய ஹைப்பர் ஓஎஸ் இருக்கும். நிறுவனத்தின் புதிய ஹைப்பர்ஓஎஸ் இடம்பெறும் முதல் போன்களும் இவைதான். கேமராவைப் பொறுத்தவரையில் லைகா சம்முலிக்ஸ் (Leica Summulix) லென்ஸைக் கொண்டிருக்கும் என சியோமி உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, சியோமி 14-னில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள், 50 எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொறுத்தப்படலாம். சியோமி 14 ப்ரோவின் கேமராக்கள் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் இதில் சோனி ஐஎம்எக்ஸ் 989 சென்சார் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய 50 எம்பி கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சியோமி 14 ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்த, இதில் 4,600 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம். சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 90 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம். 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கலாம்.

சியோமி 14 ப்ரோவில் 4,860 mAh அளவு திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம். சியோமி 11 சீரிஸ் ஆனது வெள்ளை, கருப்பு, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை போன்ற பல வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், சியோமி 14 சீரிஸை வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

விலை

தற்போது டிப்ஸ்டர் இஷான் அகர்வால் வெளியிட்டுள்ள தகவலின் படி, சியோமி 14 மற்றும் சியோமி 14 ப்ரோ மாடல்கள் 16 ஜிபி வரை ரேம் மற்றும் 1 டிபி வரையிலான ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும். சியோமி 14 போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேசிக் மாடல் விலை 4,299 யுவான் (ரூ.49,252) ஆகவும், 14 ப்ரோ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேசிக் மாடல் விலை 5,399 யுவான் (ரூ.61,849) ஆகவும் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்