சியோமியின் 14 சீரிஸ் & ஹைப்பர் ஓஎஸ்..! புதிய தொழில்நுட்பத்துடன் அதிரடி அறிமுகம்..எப்போ தெரியுமா.?
சியோமி நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளான சியோமி 14 சீரிஸ், ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றை ஒரே நாளில் வெளியிடவுள்ளது. இதில் கடந்த அக்டோபர் 17ம் தேதி எம்ஐ ஓஎஸ்-க்கு பதிலாக ஹைப்பர் ஓஎஸ்-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதோடு, சியோமி 14 சீரிஸ் அக்டோபர் 27 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
அந்தவகையில், தற்போது சியோமி 14 சீரிஸ், வாட்ச் எஸ்3 மற்றும் ஹைப்பர் ஓஎஸ் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 26 அன்று மாலை 7:00 மணிக்கு (19.00 PM) சீனாவில் வெளியிடப்படும் என்பதை ஒரு போஸ்டர் மூலம் சியோமி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், சியோமி 14 சீரிஸை வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
சியோமி 14 சீரிஸ்
இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து வெளியான தகவலின் படி, சியோமி 14-ல் 1.2K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.44 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே பொருத்தப்படலாம். டால்பி விஷன் சப்போர்டுடன் கூடிய இந்த டிஸ்பிளே 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கலாம்.
சியோமி 14 ப்ரோ ஸ்மார்ட்போனில் கர்வ்டு டிஸ்பிளேக்கு பதிலாக பிளாட் டிஸ்ப்ளே பயன்படுத்தப்படலாம். அதாவது, 2K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே இருக்கலாம். அதோடு 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பிரைட்னஸுடன் வரலாம்.
இந்த இரண்டு மாடலிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொறுத்தப்படலாம். அதோடு, ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட எம்ஐ ஓஎஸ்-க்கு பதிலாக புதிய ஹைப்பர் ஓஎஸ் இருக்கும். சியோமி 14-னில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள், 50 எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொறுத்தப்படலாம்.
Xiaomi 14 Pro: கர்வ்டுக்கு பதிலாக பிளாட் டிஸ்பிளே.! புதிய வடிவமைப்புடன் வெளியாகிறது சியோமி 14 ப்ரோ.!
சியோமி 14 ப்ரோவின் கேமராக்கள் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் இதில் 50 எம்பி மெயின் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4,600 mAh திறன் கொண்ட பேட்டரி, டைப்-சி போர்ட்டுடன் கூடிய 90 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம். 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கலாம்.
சியோமி 14 ப்ரோவில் 4,860 mAh அளவில் திறன் கொண்ட பேட்டரி, சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம். இந்த இரண்டு மாடலும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.