வந்துவிட்டது சியோமி நிறுவனத்தின் அதிரவைக்கும் படைப்பு :- சியோமி மி 6எக்ஸ்(Xiaomi Mi 6X)
சியோமி நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி மி 6எக்ஸ்(Xiaomi Mi 6X) டீசர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது . மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது வெளியிட்டுள்ள டீசர் புகைப்படத்தில் சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அம்சம் இடம்பெற்றுள்ளது.
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். சேமிப்பு இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.