ஜியோமி எம்ஐ மேக்ஸ் 2எஸ்(Xiaomi Mi Max 2S) ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது இது ஐ போன் எக்ஸ் வடிவமைப்பைகொண்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வரும் மார்ச் 27-ம் தேதி சியோமி மி மிகஸ் 2எஸ் சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி எம்ஐ மேக்ஸ் 2எஸ் சாதனம் 5.99-இன்ச் முழு எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த எம்ஐ மேக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன், மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம்.
எம்ஐ மேக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
மி மிகஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…