5ஜி வசதியுடன் முதல் முறையாக களம் இறங்கும் Mi மிக்ஸ் 3..! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

Default Image

இந்த ஆண்டு ஸ்மார்ட் போன்களுக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். திரும்பும் பக்கமெல்லாம் ஓர் ஸ்மார்ட் போனை காட்டி நம்மை மயக்கும் அளவிற்கு ஸ்மார்ட் போன் உலகம் மாறியுள்ளது. ஸ்மார்ட் போனில் எல்லாவித வசதியும் இருந்தால் மட்டுமே நாம் அதை விரும்பி வாங்குவோம்.

குறிப்பாக ட்ரெண்டுக்கு ஏற்றது போல, அதிக ஸ்டோரேஜ், அதிக RAM, அதிக நேரம் பேட்டரி நீடிப்பு இப்படி பல அம்சங்களும் பக்காவாக இருந்தால் மட்டுமே நாம் அந்த மொபைலை வாங்குவோம். இப்படிப்பட்ட ஒரு புது ரிலீஸை தான் ஷியாமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


அசத்தும் Mi !
சில ஆண்டுகளில் அசூர வளர்ச்சியை Mi வகை மொபைல்கள் பெற்று விட்டன. ஸ்மார்ட் போன் சந்தையில் அதிக வரவேற்பு இந்த வகை மொபைல்களுக்கு எப்போதுமே உண்டு. இந்த வரிசையில் 5ஜி வசதியுடன் வெளிவர உள்ளது Mi மிக்ஸ் 3. இது பிரமிக்க வைக்கும் அம்சங்களுடன் உள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறப்பம்சங்கள்!
Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட் போனின் திரை அளவு 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. மற்றும் 19:5:9 டிஸ்ப்ளே. இது 6 ஜிபி RAM, 64 ஜிபி / 128 ஜிபி மெமரி கொண்டது. மேலும், இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதன் அசத்தல் கேமராவானது 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 26 எம்எம் வைடு-ஆங்கிள் லென்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் ஆண்டிராய்ட் வெர்ஸன் 9.0 என்பதாகும். இவை அனைத்திற்கும் மேலாக முதல் முறையாக Mi மொபைல் 5ஜி வசதியுடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்