ஹூவாய் நிறுவனம், அதன் ஹூவாய் பி20 ப்ரோ உட்பட மூன்று முக்கியமான ஸ்மார்ட்போன்களை, இந்திய சந்தைக்கு அடுத்த வாரம் கொண்டு வரவுள்ளது.
வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள ஹுவாயுய் நிறுவனத்தின் வெளியீட்டு நிகழ்விற்க்கான ஊடக அழைப்புகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. வெளியான அழைப்பிதழ் ஆனது ஹூவாய் பி20 ப்ரோவின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
மொத்தம் மூன்று பின்பக்க கேமராக்கள் என்கிற புத்தம் புது ஆர்வத்தை கிளப்பியப ஹூவாய் நிறுவனத்தின் பி20 தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கும் ஒரு வடிவமைப்பை பெற்றுள்ளன. உடன் ஹூவாய் பி20 மற்றும் பி20 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களுமே மிகவும் மேம்பட்ட கேமராக்களை கொண்டுள்ளது.
டிஸ்பிளேவின் கீழ் உட்பொதிக்கப்ட்ட ஹோம் பட்டன் கொண்டுள்ள பி20 ப்ரோ ஒரு ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்க, மறுகையில் உள்ள பி20 ஒரு ஆர்ஜிபிடபுள்யூ டிஸ்பிளே கொண்டுள்ளது. இரண்டுமே, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளது. பிளாக், மிட்நைட் ப்ளூ, பின்க் கோல்ட் மற்றும் ட்வைலைட் போன்ற நான்கு வண்ண மாதிரிகளில் வாங்க கிடைக்கிறது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே நிறுவனத்தின் சொந்த கிரீன் 970 அக்ரா-கோர் செயலி கொண்டு இயங்குகிறது மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஷன்ஸ் திறன்களிலும் கவனம் செலுத்துகின்றது. ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1 கொண்டு இயங்குகிறது மற்றும் இதன் கேமராக்கள் 19 வகைகளில் 500-க்கும் அதிகமான காட்சிகளை அடையாளம் காணக்கூடிய ஏஐ அம்சத்தினை கொண்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் (டிஎக்ஸ்ஓமார்க் மதிப்பீட்டின்படி) இந்த கேமராக்கள் கூகுள் பிக்சல் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் கேமராவை விட சிறப்பானதாகும்.
ஹூவாய் பி 20 ப்ரோ ஆனது ஒரு 40எம்பி ஆர்ஜிபி சென்சார், ஒரு 20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. அப்பெஷர்களை பொறுத்தவரை எப் / 1.8, எப் / 1.6 மற்றும் எப்/ 2.4 (வைட்) கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ஹூவாய் பி20 ஆனது ஒரு 12எம்பி + 20எம்பி என்கிற அளவிலான டூயல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 24எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.
ஹூவாய் பி20 லைட் இறுதியாக உள்ள, ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, 5.84 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே, கிரீன் 659 எஸ்ஓசி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம், 16 மெகாபிக்சல் + 2ம்பி அளவிலான டூயல் பின்புற கேமரா, 16 மெகாபிக்சல் முன் பக்கம் எதிர்கொள்ளும் கேமரா, பின்புறம் உட்பொதிக்கப்ட்ட மவுண்ட் வேர்டிரிண்ட் ஸ்கேனர் மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.
இப்போது வரை, இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் விலை பற்றி எந்த தகவலும் இல்லை. இருப்பினும், ஹூவாய் அதன் கிரீன் 659 SoC ஸ்மார்ட்போன்களை ரூ.11,000 முதல் ரூ.18,000/- வரை என்கிற புள்ளிக்குள் விற்பனை செய்வதால் ஹூவாய் பி 20 லைட் ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.15,000 – ரூ.20,000/- என்கிற புள்ளிக்குள் தான் இருக்கும்.
ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, மிகவும் தீவிரமான விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். அதாவது இதன் அடிப்படை மாதிரியானது (6ஜிபி ரேம் + 64ஜிபி) ரூ. 39,999/- என்கிற விலையில் வரவாய்ப்புள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…