சீன நிறுவனமான சியோமி, இந்திய சந்தையை கைப்பற்றும் அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்பது போல் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, சியோமி இன்று அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சில புதிய அக்செசெரீஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்செசெரீஸ்களின் பட்டியலில், சியோமி நிறுவனத்தின் மூன்று பேக்பாக்ஸ்களும் இடம்பெற்றுள்ளது. அவைகள் மொத்தம் மூன்று மாதிரிகளில் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு, சியோமி ஒரு பிஸ்னஸ் பேக்பாக்கை அறிமுகம் செய்ததும் அது நுகர்வோர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. எம்ஐ டிராவல் பேக்பாக் இதன் பெயர் குறிப்பிடுவதுபோல், இதுவொரு டிராவல் பேக்பாக் ஆகும். இது உங்களின் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வடிவமைப்பை பெற்றுள்ளது. ரூ.1,999/- மதிப்புள்ள இந்த பேக்பாக் ஆனது நவீன மெஷ் ஸ்டைலிங் மற்றும் வாட்டர் ப்ரூப் திறனும் கொண்டுள்ளது.
மழையில் இருந்து உங்கள் உடமைகளை பாதுகாப்பது மட்டுமின்றி இந்தபாக்பேக் ஆனது கூடுதல் இடவசதியையும் வழங்குகிறது. அதாவது ஒரு 14 அங்குல மடிக்கணினியை கூட எளிமையாக வைத்துக்கொள்ள முடியும். குடை அல்லது தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான பாக்கெட் கொண்டுள்ள இந்த பேக்பாக் ஆனது இரண்டு நிலையான – ப்ளூ அண்ட் கிரே – வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது.
டிராவல் பேக் உடன் ஒப்பிடும் போது நிறையை வேறுபடுகிறது. மொத்தம் நான்கு பெட்டிகளை கொண்டுள்ள இந்த பேக் ஆனது ஒரு நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது. இதன் பின்புறத்தில், இரண்டு டாப்ளெட்கள் மற்றும் ஒரு 14 அங்குல மடிக்கணினியை வைக்கும் அளவிற்கு இடம் இருக்கிறது.
இந்த பேக்பாக் ஆனது மூன்று வண்ணங்களில் – பிளாக், சாம்பல் மற்றும் ப்ளூ – வெளியாகியுள்ளது. குறைவான விலை நிர்ணயத்தின் கீழ் வெளியானாலும் கூட பெரிய அளவிலான இடவசதியை வழங்குகிறது. இதனுள் 15.6 அங்குல மடிக்கணினிகளை வைக்க முடிகிறது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…