சியோமி நிறுவனம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இதனைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி சியோமி தனது புதிய சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இருந்தும் சமூக வலைத்தளங்களில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது சியோமி 14 அல்ட்ரா போனின் பேட்டரி, கேமரா அம்சங்கள் வெளியாகி உள்ளது.
தற்போது கசிந்துள்ள தகவலின் படி, சியோமி 14 அல்ட்ராவில் 2K ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கலாம். தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது.
சியோமி 14 அல்ட்ரா மாடலில் மற்ற சியோமி 14 மாடல்களில் உள்ளது போலவே அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய ஹைப்பர் ஓஎஸ் உள்ளது. ப்ராக்ஸிமிட்டி சென்சார், இன்ஃபிராரெட் ரிமோட் கண்ட்ரோல், ஃப்ளிக்கர் சென்சார், லேசர் ஃபோகஸ் சென்சார், கைரோஸ்கோப் போன்ற சென்சார்கள் உள்ளன.
கேமராவைப் பொறுத்தவரையில் சியோமி க்வாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் 50 எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி சோனி LYT900 சென்சார் கொண்ட நான்காவது கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிகாக 32எம்பி முன்பக்க கேமரா பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி 14 அல்ட்ரா போனில் அதிக நேர பயன்பாட்டிற்காக 5,500 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஸ்விஃப்ட் 120 வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜ் மூலம் வேகமாக சார்ஜ் செய்ய முடியும். அதோடு வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் அறிமுகமாகலாம். சியோமி 14 அல்ட்ராவின் மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…