சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்.! சிறப்பம்சங்கள் இதோ…
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இப்பொது, சியோமி 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த போன் மார்ச் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருந்தாலும, சமூக வலைத்தளங்களில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி வருகின்றன.
அறிமுகத்துக்கு தயாராகும் சியோமி 14 அல்ட்ரா.! வெளியான அம்சங்கள்.!
சியோமி 14 சிறப்பம்சங்கள்
- Xiaomi 14 ஆனது Xiaomi 14 Pro போலவே Snapdragon 8 Gen 3 ஆல் இயக்கப்படுகிறது.
- மேலும், இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி அல்லது 1 டிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
- 1.5K ரெசல்யூஷன் மற்றும் 20Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.36-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஹைப்பர்சார்ஜ் வேகமான சார்ஜிங்கிற்கான அம்சத்துடன் 4,610mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
- Xiaomi 14 ஸ்மார்ட் போன், ஏடி க்ரீன் (ADE Green) , கருப்பு (Black), வெள்ளை (White) மற்றும்ஸ்னோ மவுண்டன் பிங்க் (Snow Mountain Pink) வண்ணங்களில் கிடைக்கிறது.
- இந்தியாவில் Xiaomi 14 விலை, தோராயமாக ரூ. 50,000-ல் தொடங்கி ரூ.60,000 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
- Xiaomi 14 USB Type-C போர்ட் USB 3.2 Gen 1 கொண்டது.
- Xiaomi 14-ல் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.