மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸருடன் உலகளவில் அறிமுகமானது ஜியோமி 14 சீரியஸ்!
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தன்னுடைய சமீபத்திய மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸரை கொண்டுள்ள ஜியோமி 14 சீரியஸை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி தனது ஜியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தியது.
தற்போது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 (MWC 2024) என்ற நிகழ்வில், ஜியோமி நிறுவனம் தனது Xiaomi 14 மற்றும் Xiaomi 14 அல்ட்ரா ஆகிய 2 மாடல்களைஉலகளவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோமி 14 சீரிஸ் போன்கள் அனைத்தும் மிகவும் சக்திவாய்ந்த Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. இவை ஆண்ட்ராய்டு 14-ன் அடிப்படையில் ஹைப்பர் ஓ.எஸ்-ல் (HyperOS) இயங்குகின்றன.
Xiaomi மற்றும் Leica இணைந்து மொபைல் இமேஜிங் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை முறையே இந்த மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், லைகா சம்மிலக்ஸ் ஆப்டிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் Xiaomi 14 Ultra-ஆனது 12mm முதல் 120mm வரையிலான குவிய நீளம் கொண்ட குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது.
Read More – கூகுள் பே இனிமேல் இயங்காது ..? இது தான் காரணமா ..!
இது 1-இன்ச் LYT-900 இமேஜ் சென்சார் 14EV வரையிலான டைனமிக் உள்ளது. கேமரா அமைப்பில் லைக்கா 75 மிமீ டெலிஃபோட்டோ கேமரா, பெரிஸ்கோப் கேமரா மற்றும் அல்ட்ரா-வைட் என 4 கேமராக்களை உள்ளடக்கியுள்ளது. இதற்கு மாற்றாக Xiaomi 14 ஸ்மார்ட்போன் மூன்று கேமராஎ அமைப்புடன் வருகிறது. இது 14mm முதல் 75mm வரையிலான குவிய நீளம் கொண்ட குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது.
Xiaomi 14 மொபைலானது லைக்கா சம்மிலக்ஸ் ஆப்டிகல் லென்ஸ்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதான கேமராவில் மேம்படுத்தப்பட்ட எஃப்/1.6 அபெர்ச்சர், லைட் ஃப்யூஷன் 900 இமேஜ் சென்சார் மற்றும் 13.5 EV வரை டைனமிக்கை கொண்டுள்ளது. இதுபோன்று, அல்ட்ரா-வைட் கேமராவின் ரெசல்யூஷன் 50எம்பிக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் டெலிஃபோட்டோ லென்ஸையும் வழங்குகிறது.
குறைந்தபட்ச ஃபோகஸ் தூரம் 10செ.மீ என கூறப்படுகிறது. ஜியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) 6.73 இன்ச் AMOLED டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது. இதுபோன்று, Xiaomi 14 ஆனது 6.36-இன்ச் AMOLED டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. Xiaomi 14 ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜ் ஆகியவை 4610mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
Xiaomi 14 Ultra ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் சமீபத்திய 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜ் உடன் பெரிய 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும், ஜியோமி சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் 14 16 ஜி.பி ரேம் மற்றும் 256 ஜிபி ரோம் வரை உள்ளது. இதன் விலைகள் Xiaomi 14 ஸ்மார்ட்போன் விலையானது 999 யூரோக்களிலிருந்து (சுமார் ரூ.50,000) தொடங்குகிறது, அதே நேரத்தில் Xiaomi 14 அல்ட்ரா விலையானது 1,499 யூரோக்களிலிருந்து (ரூ.80,000) தொடங்குகிறது.