இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்!
Xiaomi 14 series : சியோமி நிறுவனம் தனது முதன்மை ஸ்மார்ட்போன் சீரிஸை சந்தையில் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, தனது 14 சீரிஸை கடந்தாண்டு அக்டோபர் 26ம் தேதி சீனாவில் வெளிவந்த நிலையில், இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
Read More – ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!
சியோமி 14 சீரிஸில் Xiaomi 14, Xiaomi 14 Pro, Xiaomi 14 Ultra ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகமாக உள்ளது. அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை 6 மணிக்கு இந்த மாடல்களின் வெளியீட்டு நிகழ்வை Xiaomi திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வை Xiaomi நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது.
Read More – “மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்”.. மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்!
கடந்த மாதம் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. Xiaomi 14 சீரியசுக்கான அதிகாரப்பூர்வ விலை இன்னும் வெளியிடப்படவில்லை, இருப்பினும், சுமார் ரூ.75,000 விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த மாடல்களில் பல்வேறு அம்சங்கள் இருப்பதால் ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
Read More – அசத்தலான அம்சங்கள்.. மலிவான விலை.. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி F15 சீரிஸ்!
சியோமி 14 சீரிஸ் சிறப்பம்சங்கள்:
- Xiaomi 14 சீரிஸ் Qualcomm-இன் சமீபத்திய Snapdragon 8 Gen 3 மூலம் இயக்கப்படுகிறது மற்றும் HyperOS, Android 14ஐ அடிப்படையாகக் கொண்டது.
- 6.36 இன்ச் LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 1.5K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது.
- இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி அல்லது 1 டிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்ப்படுகிறது.
- ஸ்மார்ட்போனில் 50MP ஹண்டர் 900 முதன்மை சென்சார், 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் மற்றொரு 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் யூனிட் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.
- செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32MP முன் கேமராவைக் கொண்டிருக்கும். இதுபோன்று, USB Type-C போர்ட் USB 3.2 Gen 1 கொண்டது.
- Xiaomi 14-ஆனது 90W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்களுடன் 4,610 mAh பேட்டரியை கொண்டுள்ளது.
- Xiaomi 14 ஸ்மார்ட் போன், ஏடி க்ரீன் (ADE Green) , கருப்பு (Black), வெள்ளை (White) மற்றும் ஸ்னோ மவுண்டன் பிங்க் (Snow Mountain Pink) வண்ணங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.