Xiaomi 14 Pro: கர்வ்டுக்கு பதிலாக பிளாட் டிஸ்பிளே.! புதிய வடிவமைப்புடன் வெளியாகிறது சியோமி 14 ப்ரோ.!

Xiaomi 14 Pro

சியோமி நிறுவனம் அதன் புதிய சியோமி 14 சீரிஸ்-ஐ அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ மற்றும் சியோமி 14 அல்ட்ரா என மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள் இருக்கலாம்.

தற்போது, இந்த சீரிஸில் இருக்கும் சியோமி 14 ப்ரோ மாடலின் டிசைன் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, OnLeaks என்ற டிப்ஸ்டர் இந்த ஸ்மார்ட்போனின் டிசைனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

டிஸ்பிளே

சியோமி 14 ப்ரோ ஸ்மார்ட்போனை இதற்கு முந்தைய மாடல் ஆன சியோமி 13 ப்ரோவுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இதில் கர்வ்டு டிஸ்பிளேக்கு பதிலாக பிளாட் டிஸ்ப்ளே பயன்படுத்தப்படலாம். அதாவது, 2K ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பிரைட்னஸுடன் வரலாம்.

Google Pixel 8 Series: ரூ.5,000 வரை தள்ளுபடி.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய கூகுள் பிக்சல் 8 சீரிஸ்.!

பிராசஸர்

14 ப்ரோ மாடலில் இதுவரை சந்தையில் அறிமுகம் செய்யப்படாத குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொறுத்தப்படலாம். இதே போல ஐ-க்யூ நிறுவனம் தயாரித்து வரும் ஐ-க்யூ 12 ஸ்மார்ட்போனிலும் இதே சிப்செட் பொறுத்தப்படலாம். இதனால் எந்த ஸ்மார்ட்போன் போன் முதலில் வெளியாகிறதோ, அந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்புடன் அறிமுகப்படுத்தப்படும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

கேமரா

சியோமி 14 ப்ரோவின் கேமராக்கள் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் இதில் 50 எம்பி மெயின் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 13 ப்ரோவைப் பார்க்கையில் 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும். முன்புறம் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா உள்ளது.

Vivo Y200 5G: 5G ஆதரவுடன் புதிய வருகையை அறிவித்த விவோ.! விரைவில் இந்தியாவில் வெளியீடு.!

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போனில் 4,860 mAh அளவில் திறன் கொண்ட பேட்டரி பொறுத்தப்படலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம். ஸ்டோரேஜ் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்