அடடா…200MP கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமானது “Realme11Pro5G” ஸ்மார்ட் போன்.!!

ரியல்மீ (Realme) நிறுவனம் இந்தியாவில் வரும் ஜூன் 8ம் தேதி அதன் ரியல்மீ 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) சீரிஸை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இந்த ஸ்மார்போன் சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதில் ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro+5G) என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன்களின் அறிமுக நிகழ்வு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கான நேரடி ஒளிபரப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்த போன் எப்போது அறிமுகம் ஆகும் என சிலர் காத்திருந்த நிலையில், தற்போது, போன் அறிமுகம் ஆகியுள்ளதால் போனை வாங்குவதற்கு ரெடியாக உள்ளார்கள்.
போன்களின் சிறப்பு அம்சங்கள்
ரியல்மி 11 ப்ரோ + 5G டிஸ்ப்ளே (Display):
இந்த ஸ்மார்ட் போனானது 6.7 இன்ச் FHD+ (முழு தெளிவு திறன்) கொண்ட வளைந்த AMOLED (அமோல்ட்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) வழங்குகிறது. இதன் மூலமே இது பலருக்கும் பிடித்த நல்ல போனாக இருக்கும் என தெரிகிறது.

ரியல்மி 11 ப்ரோ டிஸ்ப்ளே (Display):
இந்த ஸ்மார்ட்போனது 6.4 இன்ச் FHD+ (முழு தெளிவு திறன்) கொண்ட AMOLED (அமோல்ட்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 90Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) வழங்குகிறது. மேலும் இதில், 1,000 நெட்ஸ் ஒளித்திறனை கொண்டுள்ளது.
கேமரா
ரியல்மி 11 ப்ரோ + 5G
- இந்த ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் 200MP ரியர் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் + 2MP மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் 32MP செல்பி கேமரா ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் இருக்கிறது.
ரியல்மி 11 ப்ரோ

- 64MP பிரைமரி கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளிட்ட இரண்டு பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
பேட்டரி வசதி
- ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5 ஜி 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.
விலை எவ்வளவு..?
இன்று அறிமுகமான இந்த போன்கள் விலை பற்றிய விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் 15-ஆம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
And here it is! The early access sale begins today at 6PM. The #realme11ProPlus5G starting 27,999 and the #realme11Pro5G starting at 23,999! #200MPzoomToTheNextLevel
Grab the masterpiece today! pic.twitter.com/1O6CddKzNJ— realme (@realmeIndia) June 8, 2023
இந்த விலையில், இந்த இரண்டு போன்களுமே நல்ல அம்சங்களை கொண்ட தரமான போனாக தான் இருக்கிறது. எனவே, ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம். இன்னும் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You can own the #realme11ProSeries5G today! The Early Access Sale begins at 6PM today evening.
Avail offers up to ₹2000. Stay tuned! #200MPzoomToTheNextLevel pic.twitter.com/bZ1LC1dubH
— realme (@realmeIndia) June 8, 2023