இந்தியாவில் OPPO F23 5G விலை, விவரக்குறிப்புகள், வண்ணங்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
OPPO F23 5G :
OPPO நிறுவனம் விரைவில் இந்தியாவில் OPPO F23 5G ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், அதற்கு முன்பே OPPO F23 5G ஸ்மார்ட்போன் பற்றிய விலை மற்றும் சிறப்பு அம்சம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
அதன்படி, இது இந்தியாவில் ரூ. 30,000-க்குள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மே 15 -ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
OPPO F23 5G சிறப்பு அம்சங்கள்
பேட்டரி எப்படி இருக்கும்..?
பொதுவாக போன் வாங்க வேண்டும் என்றாலே அந்த போன் நன்றாக சார்ஜ் எவ்வளவு நேரம் இருக்கும் என்பதை பார்த்து தான் பலரும் வாங்குவது உண்டு. அந்த வகையில் இந்த OPPO F23 5G ஸ்மார்ட்போன் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி பவர் இருப்பதால் சார்ஜ் நன்றாக நிற்கும் என கூறப்படுகிறது.
அத்துடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருவதால் 35-40 நிமிடங்களில் உங்களுடைய போனை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.கூல் பிளாக் மற்றும் போல்ட் கோல்ட் என இரண்டு வண்ண விருப்பங்களில் போன் வெளியிடபடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்கலாமா..?
வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஒரு நல்ல பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என்றால் இந்த OPPO F23 போனை நீங்கள் வாங்கலாம். இதற்கு முன்பு OPPO போன்களை உபயோகம் செய்தவர்களுக்கு இந்த ஃபோனும் கண்டிப்பாக பிடிக்கும். மேலும், இந்தியாவில் இந்த போன் வெளியாகுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…