ஆஹா..அட்டகாசமான பட்ஜெட்டில் அசத்தலான ‘ 5 ஜி போன்’…அதிரடி கட்டிய “OPPO”.!!

OPPO F23 5G

இந்தியாவில் OPPO F23 5G விலை, விவரக்குறிப்புகள், வண்ணங்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

OPPO F23 5G : 

OPPO நிறுவனம் விரைவில் இந்தியாவில் OPPO F23 5G ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், அதற்கு முன்பே OPPO F23 5G ஸ்மார்ட்போன் பற்றிய விலை மற்றும் சிறப்பு அம்சம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, இது இந்தியாவில் ரூ. 30,000-க்குள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மே 15 -ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

OPPO F23 5G சிறப்பு அம்சங்கள்  

  • OPPO F23 5G டிஸ்பிளே (Display)  6.72-இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.
  • கேமராக்கள்:  64MP முதன்மை கேமரா, 2MP மோனோக்ரோம் மற்றும் 2MP மைக்ரோலென்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32எம்பி செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 5ஜிபி விரிவாக்கக்கூடிய ரேம் ஆகியவற்றைவும், 256 ஜிபி (256GB)  (இன்டெர்னல் ஸ்டோரேஜையும்) சேமிப்பு வசதியை கொண்டுள்ளது.
  • இந்த OPPO F23 5G  ஸ்மார்ட்போன்  Android 13 இல் இயங்குங்குகிறது.

பேட்டரி எப்படி இருக்கும்..? 

பொதுவாக போன் வாங்க வேண்டும் என்றாலே அந்த போன் நன்றாக சார்ஜ் எவ்வளவு நேரம் இருக்கும் என்பதை பார்த்து தான் பலரும் வாங்குவது உண்டு. அந்த வகையில் இந்த OPPO F23 5G ஸ்மார்ட்போன் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி பவர் இருப்பதால் சார்ஜ் நன்றாக நிற்கும் என கூறப்படுகிறது.

அத்துடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருவதால் 35-40 நிமிடங்களில் உங்களுடைய போனை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.கூல் பிளாக் மற்றும் போல்ட் கோல்ட் என இரண்டு வண்ண விருப்பங்களில் போன் வெளியிடபடும்  எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாங்கலாமா..? 

வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஒரு நல்ல பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என்றால் இந்த OPPO F23 போனை நீங்கள் வாங்கலாம். இதற்கு முன்பு OPPO போன்களை உபயோகம் செய்தவர்களுக்கு இந்த ஃபோனும் கண்டிப்பாக பிடிக்கும். மேலும், இந்தியாவில் இந்த போன் வெளியாகுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்