ஈசிஎஸ்(ECS) என்று கூறப்படும் நிறுவனம் இன்று உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டரை அதாவது பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. விண்டோஸ்10 ஓஎஸ் கொண்ட இந்த சிறிய கம்ப்யூட்டர் லைவ் Q என்ற பெயரில் ரூ.15550 விலையில் இந்தியாவில் கிடைக்கும். அதேபோல் ஓஎஸ் இல்லாமல் வேண்டுமென்றால் ரூ.13500க்கு பெற்று கொள்ளலாம்.இரண்டு மாதிரியான அமைப்புகளில் இந்த கம்ப்யூட்டர் ஐ பயன்படுத்தலாம். இந்த கம்ப்யூட்டரை ஈசிஎஸ் நிறுவனங்களின் ஷோரூம்களிலும், இகாமர்ஸ் இணையதளங்களிலும் பெற்று கொள்ளலாம்.
இந்த கம்ப்யூட்டரின் மிகப்பெரிய அம்சமே இதன் அளவுதான். இந்த கம்ப்யூட்டர் 70x70x31.4மிமீ அளவில் உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த கம்ப்யூட்டரில் உள்ள மானிட்டரை தேவைப்படும்போது வெளியே எடுத்து கொள்ளவும், மற்ற நேரங்களில் உள்ளே மறைத்து வைத்து கொள்ளவும் முடியும்.இது 2 இன் 1 அம்சமாகும். மேலும் இந்த கம்ப்யூட்டரை டிவி போன்றும் பயன்படுத்தலாம், அதுமட்டுமின்றி 4கே தரத்தில் இசை உள்பட பொழுது போக்கு அம்சங்களுக்காகவும் பயன்படுத்தலாம்.
இந்த மிகச்சிறிய கம்ப்யூட்டரில் அப்பல்லோ லேக் பிராஸசர் அமைந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. விண்டோஸ் 10 ஓஎஸ் அமைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டரில் ஆர்ஜே 45 லேன் கனெக்டர்மற்றும் 802.11ஏசி, புளூடூத் 4.1 ஆகியவை அமைந்துள்ளது. மேலும் இந்த கம்ப்யூட்டரைன் ஸ்டோரேஜை அதிகப்படுத்தி கொள்ள 128ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஸ்டோரேஜ் வேண்டுமென்றால் இரண்டு யூஎஸ்பி வசதியும் உண்டு.
இந்த தலைமுறையினர்களுக்கு ஏற்ற வகையில் அளவு, அதிக நவீன வசதிகள், கவர்ச்சியான டிசைன், பயன்படுத்துவதற்கு எளிமையாக என பல சிறப்பு அம்சங்கள் இந்த கம்ப்யூட்டரில் உள்ளது. பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவுக்கு மிகச்சிறிய கம்ப்யூட்டரை அறிமுகம் செய்வதில் பெருமைப்படுவதாக ஈசிஎஸ் நிறுவனத்தின் இந்திய மேலளர் ராஜசேகர் பட் தெரிவித்துள்ளார்.
World’s Smallest Computer Introduction: ECS Announcement
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…