உலகின் மிகச் சிறிய கணினியை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் உப்புத் தூள் அளவில் இருக்கும் மிகச் சிறிய கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது ஐபிஎம் நிறுவனம்.
இந்த உப்புத் தூள் அளவில் இருக்கும மிகச் சிறிய கணியை உருவாக்க மொத்தம் 5 வருடம் ஆனதாக ஐபிஎம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபிஎம்-இன் சிறிய கணினி.
ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கணினியின் அளவு 1மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1மில்லி மீட்டர் நீளம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மைக்ரோஸ்கோப் கொண்டு தான் இந்த சாதனத்தை பார்க்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்க்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் கொண்டு இந்த மிகச் சிறிய கணினி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 1000-க்கும் அதிகமான சிறிய சிப்புகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் சார்ஜ் வசதிகளுக்கு தகுந்தபடி வயர்லெஸ் டெக்னலாஜி பயன்படுத்தப்படுகிறது. பின்னர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஐபிஎம் சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபிஎம்-இன் சிறிய கணினி. இதே போன்று ஸான்கோ டைனி டி1 இப்போது உலகின் மிகச் சிறிய மொபைல் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…