உலகின் மிகச்சிறிய கம்பியூட்டர் அறிமுகம் ..!!

Default Image

உலகின் மிகச் சிறிய கணினியை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் உப்புத் தூள் அளவில் இருக்கும் மிகச் சிறிய கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது ஐபிஎம் நிறுவனம்.

இந்த உப்புத் தூள் அளவில் இருக்கும மிகச் சிறிய கணியை உருவாக்க மொத்தம் 5 வருடம் ஆனதாக ஐபிஎம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபிஎம்-இன் சிறிய கணினி.

ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கணினியின் அளவு 1மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1மில்லி மீட்டர் நீளம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மைக்ரோஸ்கோப் கொண்டு தான் இந்த சாதனத்தை பார்க்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்க்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் கொண்டு இந்த மிகச் சிறிய கணினி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 1000-க்கும் அதிகமான சிறிய சிப்புகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் சார்ஜ் வசதிகளுக்கு தகுந்தபடி வயர்லெஸ் டெக்னலாஜி பயன்படுத்தப்படுகிறது. பின்னர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஐபிஎம் சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபிஎம்-இன் சிறிய கணினி. இதே போன்று ஸான்கோ டைனி டி1 இப்போது உலகின் மிகச் சிறிய மொபைல் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்