அமெரிக்கா வானொலி நிலையம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர டிஜேவை (DJ) உருவாக்கி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தற்பொழுது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துவிடுகிறது. இதனால் பல துறைகளில் பலவித மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளன
அந்தவகையில் அமெரிக்காவில் உள்ள ஒரு வானொலி நிலையம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர டிஜேவை (DJ) உருவாக்கி உள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆல்பா மீடியாவின் கேபிஎப்எப் லைவ் 95.5 FM ஆனது பியூட்டரி மீடியாவின் (Futuri Media) ரேடியோ ஜிபிடி (RadioGPT) மென்பொருளைப் பயன்படுத்தி இந்த டிஜேவை உருவாக்கியுள்ளது.
இது குறித்து கூறிய ஆல்பா மீடியாவின் நிர்வாக துணைத் தலைவர் (ஈவிபி) பில் பெக்கர், ரேடியோ GPT ஆனது அதிகமான நிகழ்வுகளில், உள்ளடக்கத்தை (Content Creators) உருவாக்குபவர்களை காட்சிப்படுத்தவும், பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில், தகவல்களை தெரிவிக்கும் வகையிலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், பாடல்களை ஸ்ட்ரீமிங் செய்யும் தளமான ஸ்பாட்டிபை (Spotify UK) அயர்லாந்தில் உள்ள பிரீமியம் வாடிக்கையாளர்களுக்காக டிஜே எனப்படும் AI அம்சத்தை வெளியிட்டது. இந்த அம்சம் முதலில் பிப்ரவரியில் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பிரீமியம் சந்தாதாரர்களுக்குக் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…