உலகின் விலை உயர்ந்த மொபைல் போன்..! இவ்வளவு விலையா..?
கடந்த ஏப்ரல் 3-ஆம் “ஹேப்பி பெர்த்டே டூ யூ” என்று வாழ்த்துச்சொல்ல நமது கைகளில் மொபைல் போன்கள் இல்லை, மாறாக ஒன்றிற்கு இரண்டு ஸ்மார்ட்போன்களே உள்ளன என்பதால் மொபைல்போனின் பிறந்தநாளை தவறவிட்டதில் எந்த விதமான வருத்தமும் வேண்டாம்.
சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்னர், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 அன்று, மோட்டோரோலா நிறுவனத்திடம் இருந்து DynaTAC 8000x எனும் வணிக ரீதியாக – அனைவருக்கும் கிடைக்கும் – முதல் மொபைல் போன் அறிமுகமானது.
அறிமுகமான DynaTAC 8000x மொபைல் போன் ஆனது ஒருமுழுமையான சார்ஜ் அடைய கிட்டத்தட்ட 10 மணி நேரம் எடுத்துக் கொண்டது. இருந்தாலும் கூட அது வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே பேச்சு நேரத்தை வழங்கியது.
ஒரு எல்இடி டிஸ்ப்ளே DynaTAC 8000x மொபைல் போன் ஆனது 30 தொலைபேசி எண்களை தன்னுள் சேமித்து வைக்கும் திறனை கொண்டிருந்தது. அதாவது டயல் செய்ய அல்லது ரீகால் செய்ய அனுமதிக்கும்.
1984-ல் சந்தையை எட்டிய DynaTAC 8000x மொபைல் போனின் விலை ரூ.2,59,455/- ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது 3,995 அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்போதைய நிலவரத்தின்படி, இந்த மொபைல் போனின் விலை ரூ.259697/-ஆகும். அதாவது தோராயமாக ரூ.2.60 லட்சம்.DynaTAC என்பது “டைனமிக் அடாப்டிவ் டோட்டல் ஏரியா கவரேஜ் (Dynamic Adaptive Total Area Coverage.) என்பதும் சுருக்கமாகும் என்னதும், இந்த மொபைல் போனின் எடை சுமார் 2 கிலோ இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.