Wordpad: உங்க ஓஎஸ் அப்டேட் மட்டும் பண்ணிராதீங்க..! இப்பதான் நியூஸ் வந்துச்சு.?
மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஓஎஸ்-ல் உள்ள ஒரு முக்கியமான பயன்பாடு வேர்ட்பேட் ஆகும். இது லேப்டாப் மற்றும் கணினியில் தகவல்களை எழுதுதல் மற்றும் திருத்துதல் தொடர்பான அனைத்து அடிப்படைப் பணிகளுக்கும் பயன்படுகிறது. இருப்பினும், மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் வேர்ட்பேட் அகற்றப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில், “வேர்ட்பேட் இனி புதுப்பிக்கப்படாது. வரும் காலங்களில் விடப்படும் விண்டோஸின் புதிய அப்டேட்களில் வேர்ட்பேட் அகற்றப்படும். .doc மற்றும் .rtf மற்றும் .txt போன்ற உரை ஆவணங்களுக்கான விண்டோஸ் நோட் பேட் மற்றும் பிற ஆவணகளுக்கு மைக்ரோசாப்ட் வேர்ட்-ஐ பரிந்துரைக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேர்ட்பேட் பயன்பாடு அகற்றப்படுவது பல பயனர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முடிவு சரியாக உள்ளது என்றும், வேர்ட்பேட்டின் இடத்தை நிரப்ப மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியுள்ள பயன்பாடுகள் வேர்ட்பேட்டை விட சிறந்தவை என்றும் ஒரு சில பயனர்கள் கூறுகின்றனர்.
வேர்ட்பேட் அகற்றப்பட்ட பிறகு, மைக்ரோசாப்ட் வேர்ட் ஆப்ஸ் மற்றும் ஓன்லைன் வேர்ட் ஆகியவற்றை பயன்படுத்த பயனர்கள் மாற வேண்டியிருக்கும். இந்த பயன்பாடுகள் வேர்ட்பேட்டை விட பயன்படுத்த எளிதானவை மற்றும் அதிக அம்சங்களைக் கொண்டுள்ளன. எனவே, பயனர்கள் இந்த பயன்பாடுகளை எளிதாக கற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேர்ட்பேட் அகற்றப்பட காரணம் என்ன.?
- வேர்ட்பேட் என்பது மிகவும் மிக பழைய பயன்பாடு ஆகும். இது 1983ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அதன் பிறகு அதில் எதுவும் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
- இந்த வேர்ட்பேட்டின் இடத்தை நிரப்ப மைக்ரோசாப்ட் வேர்ட் ஆப்ஸ், ஓன்லைன் வேர்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாடுகள் வேர்ட்பேட்டை விட அதிக அம்சங்களைக் கொண்டுள்ளன. மேலும் அவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜெனரேட்டிவ் ஏஐ-இல் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், ஏஐ மூலமாக இயங்கும் அம்சங்களுடன் விண்டோஸ் 12 ஆனது வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 2024-ல் வெளியாகும் என பல வந்ததிகள் பரவி வரும் நிலையில் விண்டோஸ் 11-ல் இருப்பது போல, விண்டோஸ் 12-ல் பல பிரத்தியேக அம்சங்கள் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.