சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.இது மற்ற நிறுவனங்களலைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மாடல்களாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
வெளியான தகவலின்படி மி மேக்ஸ் 3 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டு வெளவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். வீடியோ கேம், ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த சியோமி மி மேக்ஸ் 3 சாதனத்தில் 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் வெளிவரும்.
மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை 3ஜிபி/4ஜிபி மற்றும் 64ஜிபி /128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் சியோமி மி 7 ஸ்மார்ட்போன் மாடலை விட பல சிறப்பம்சங்களை கொண்டு மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு பொறுத்தவரை 16,842-இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…