300 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த விப்ரோ!
போட்டிநிறுவனங்களுக்கு மறைமுகமாக வேலைப்பார்த்து வந்த 300 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள மிக பெரிய ஐடி நிறுவனங்களுள் ஒன்று விப்ரோ. இது மூன்லைட்டிங் குறித்து கடுமையாக எச்சரித்து வந்த நிலையில் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மூன்லைட்டிங் எனப்படும் மற்ற போட்டிநிறுவனங்களுக்கு ரகசியமாக பணிபுரிந்து வந்த பல 300 ஊழியர்களையோ பணி நீக்கம் செய்து ஷாக் கொடுத்துள்ளது.
இது குறித்து விப்ரோ நிவாக தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, முன்னதாகவே எச்சரித்து வந்த நிலையில், இதனை யாரும் ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளாததால் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக” டிவீட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.