சியாமி(Xiaomi) போன்களில் சிறந்தது எது..?

Published by
Dinasuvadu desk

 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியாமி ரெட்மீ 5, இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதே நிறுவனத்தைச் சேர்ந்த ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆகியவை, நம் நாட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

ரெட்மீ 5ஏ மற்றும் ரெட்மீ நோட் 4 ஆகியவை சிறந்த விற்பனையை பெறும் மாடல்களின் வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகியவை ஏறக்குறைய ஒத்த வடிவமைப்பை கொண்டவையாக உள்ளன. இவை இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் முழு திரை வடிவமப்பை கொண்டு, 18:9 என்ற விகிதாசாரத்தில் அமைந்து உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு பெரிய அளவிலான திரையாக இல்லாமல், நீள்வாக்கில் அமைந்த தோற்றத்தை அளிக்கிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் பின்பக்க பேனலின் மேற்பகுதியின் நடுவில், ஒற்றை கேமராவை கொண்டு, இரண்டின் பின்பக்க பேனலும் ஒத்தாற் போல இருக்கின்றன. இந்த கேமராவிற்கு கீழே எல்இடி ஃபிளாஷ் யூனிட் மற்றும் ஒரு வட்ட வடிவ கைரேகை சென்ஸர் ஆகியவற்றை காண முடிகிறது.

ரெட்மீ 5ஏ-யின் வடிவமைப்பை பொறுத்த வரை முழு திரை வடிவமைப்பு இல்லாமல் வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 16:9 என்ற விகிதத்தில் அமைந்த வழக்கமான திரையைப் பெற்றுள்ளது. பின்பக்க கேமராவின் அமைப்பு கூட வேறுபட்டு, மேலே இடதுபக்க முனையில் ஆன்டினா லைனுக்கு மேலே அமைந்துள்ளது. இதையொட்டி எல்இடி ஃபிளாஷ் அமைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று ஸ்மார்ட்போன்களிலும் ஒரு கவர்ச்சிகரமான வடிவமைப்பு இல்லாவிட்டாலும், ரெட்மீ 5ஏ உடன் ஒப்பிட்டால், ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகியவற்றில் உள்ள மெலிந்த பேசில்கள் பாராட்ட தகுந்தவை.

ரெட்மீ 5 இல் ஒரு 5.7-இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே உடன் 1440 x 720 பிக்சல் பகுப்பாய்வு காணப்படுகிறது. ஆனால் ரெட்மீ நோட் 5 இல் 5.99-இன்ச் எஃப்ஹெச்டி+ டிஸ்ப்ளே உடன் 2160 x 1080 பிக்சல் பகுப்பாய்வை பெற்றுள்ளது. மற்றொருபுறம், ரெட்மீ 5 இல் ஒரு சிறிய 5-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே உடன் 1280 x 720 பிக்சல் பகுப்பாய்வைக் கொண்டுள்ளது. மேற்கூறிய மூன்று ஸ்மார்ட்போன்களின் திரை அளவுகள் மற்றும் பகுப்பாய்வு அளவுகளை வைத்து பார்க்கும் போது, ரெட்மீ நோட் 5 இல் உள்ள திரை, தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஏனெனில் மற்ற இரண்டையும் விட பெரிய திரை என்பதோடு, கூடுதலான பிக்சல் அளவையும் அளிக்கிறது. , ஒரு 6-இன்ச் ஸ்மார்ட்போனை நம் கையில் வைத்துள்ள ஒரு உணர்வை, இந்த முழு திரை வடிவமைப்பு அளிப்பதில்லை.

கேமரா இந்த ஸ்மார்ட்போன்களின் ஆப்டிக்கல் பகுதியை குறித்து பார்த்தால், ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகியவை ஒத்த சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் பின்பகுதியில் பிடிஏஎஃப் உடன் கூடிய ஒரு 12எம்பி முக்கிய கேமரா, எஃப்/2.2 துளை மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவை காணப்படுகின்றன. முன்பகுதியில் எல்இடி செல்ஃபீ ஃபிளாஷ் உடன் கூடிய ஒரு 5எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது. இதற்கு வேறுபட்டதாக, ரெட்மீ 5ஏ இல் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய ஒரு 13எம்பி பின்பக்க கேமரா, எஃப்/2.2 துளை மற்றும் பிடிஏஎஃப் தவிர, எஃப்/2.0 துளை உடன் கூடிய ஒரு 5எம்பி செல்ஃபீ கேமரா காணப்படுகிறது.

ரெட்மீ 5 இல் உள்ள 1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி-யை பயன்படுத்தி இயங்குகிறது. மேலும் ஒரு 3300எம்ஏஹெச் பேட்டரி மூலம் ஆற்றலைப் பெறுகிறது. ரெட்மீ நோட் 5 இல் ஒரு 2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி-யை கொண்டுள்ளது என்பதோடு, 4000எம்ஏஹெச் திறனுள்ள பேட்டரி மூலம் வேகமாக சார்ஜ் ஆகி விடுகிறது. ரெட்மீ 5ஏ இல் 1.4ஜிஹெச்இசட் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஓசி மற்றும் ஒரு 3000எம்ஏஹெச் பேட்டரி காணப்படுகிறது. மேற்கூறிய மூன்றில் ரெட்மீ நோட் 5 இல் ஒரு மேம்பட்ட செயலி இருப்பதோடு, மற்ற இரண்டு மாடல்களிலும் உள்ளதை விட சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் ரெட்மீ 5ஏ இல் உள்ள 3000எம்ஏஹெச் பேட்டரி, ஸ்மார்ட்போனுக்கு நீண்டகால பேட்டரி திறன் அளிப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது, 4000எம்ஏஹெச் பேட்டரியைக் கொண்ட ரெட்மீ நோட் 5 சிறப்பான செயல்பாட்டை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரெட்மீ 5-யைப் பொறுத்த வரை, 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.7,999 விலையிலும், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.8,999 விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.10,999 விலையிலும் என்று மொத்தம் 3 வகைகளில் கிடைக்கின்றன. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மீ நோட் 5, 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.9,999 விலையில் ஒரு வகை, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.11,999 ஒரு வகை என்று இரு வகைகளில் கிடைக்கின்றன.

ரெட்மீ 5ஏ-யைப் பொறுத்த வரை, மேற்கூறிய மூன்றில் துவக்க-நிலை ஸ்மார்ட்போனாக அமைந்து, இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. இதில் முதல் வகை, 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.5,999 விலையிலும், மற்றொரு வகை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.6,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது வரை ரெட்மீ 5ஏ துவக்க நிலை வகையை ரூ.4,999 என்ற விலையில் சியாமி நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து ரூ.1,000 குறைவாக விற்கப்படுகிறது.

 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago