வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் அமேசான் அலெக்சா(Amazon Alexa) வை இப்படிஎல்லாம் பயன்படுத்தலாமா..!!
வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் அமேசான் அலெக்சா , கடந்த ஆண்டு ஆசிய மார்க்கெட்டில் நுழைந்து பிரபலமாகி வருகிறது.
இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட்(Vertical Assistant Amazon Alexa) கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு புதுமைகளையும் புதிய வசதிகளையும் புகுத்தி தற்போது இந்திய மார்க்கெட்டிலும் நுழைந்துள்ளது இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட்டில் தற்போது உள்ளூர் டிராவல் சேவை நிறுவனங்களான ஓலா மற்றும் உபேர் இணைப்பிலும் உள்ளது.
இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் செயலி மூலம் ஓலா மற்றும் உபேர் கேப் சர்வீஸில் புக் செய்யும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. உங்களது ஓலா அல்லது உபேர் அக்கவுண்டை இந்த செயலியுடன் நீங்கள் இணைத்துவிட்டால் இந்த வசதியை நீங்கள் பெற்று கொள்ளலாம்.
இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் செயலி மூலம் உங்கள் வீட்டை நீங்கள் ஸ்மார்ட் வீடாக மாற்றலாம்.
இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் செயலி மூலம் அமேசானில் வெகு எளிதாக ஆர்டர் செய்யலாம். உதாரணமாக நீங்கள் ஒரு பல்ப் வாங்க விரும்பினால், இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் ஆப், நீங்கள் இதற்கு முன் வாங்கிய பல்புகளின் விவரத்தை உங்களுக்கு எடுத்து கொடுக்கும்
இந்த அலெக்ஸா வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் மூலம் உங்களுக்கு தேவையான போட்டிகளின் ஸ்கோர்களையும் அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட போட்டியின் ஸ்கோரை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதன் விபரங்களை மட்டும் அளித்தால் போதும்.
உலகில் அவ்வப்போது நடக்கும் லேட்டஸ் செய்திகளையும் இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் உங்களுக்கு தெரியப்படுத்தும். இதனால் நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலக நடப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த அமேசான் அலெக்ஸா எக்கோவை உங்கள் நண்பர் அல்லது உறவினரும் பயன்படுத்தினால் நீங்கள் இலவசமாக அவரை அழைத்து பேசலாம்.