இந்தியாவில் Vivo T3 5G எப்போது அறிமுகம்? எதிர்பார்க்கும் சிறப்பசங்கள்.. காத்திருக்கும் ரசிகர்கள்..
Vivo T3 5G : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Vivo T3 5G மார்ச் 21ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான Vivo T3 5G இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்றும் விவோவின் 5ஜி திறன்களுடன் கூடிய இந்த Vivo T3 5G மாடலானது அதன் ஸ்மார்ட்போன்களின் விரிவாக்கத்தை அடுத்தகத்திற்கு கொண்டு சேர்க்கும் என கூறப்படுகிறது.
Read More – இனி டெக்ஸ்ட் to வீடியோ… விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!
Vivo T3 5G டிசைன்:
Vivo T3 5G -யின் முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. பின்புறத்தில் செவ்வக கேமரா அமைப்பில் இரண்டு லென்ஸ்கள், ஒரு ஃப்ளிக்கர் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. இந்த மொபைலானது ஸ்டைலான பிரீமியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடலில் இரட்டை ஸ்பீக்கர்களை சேர்க்கப்பட்டுள்ளது. Vivo T3 5Gஇன் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, இருப்பினும் சில கசிந்துள்ளது.
Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது!
டிஸ்ப்ளே மற்றும் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் பஞ்ச்-ஹோல் AMOLED டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் கேமரா அமைப்பு கொண்டுள்ளது. OIS உடன் 50 MP Sony IMX882 லென்ஸ், 2 MP பொக்கே லென்ஸ் மற்றும் 2 MP ஃப்ளிக்கர் சென்சார் உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபிக்களுக்காக 16 எம்.பி கேமரா உள்ளது.
இந்தியாவில் Vivo T3 5G விலை:
ஏற்கனவே இருக்கும் Vivo T2க்கு அடுத்தபடியாக Vivo T3 இந்தியாவிற்கு விரைவில் வெளியாக உள்ள நிலையில், எதிர்பார்க்கப்படும் அதன் ஆரம்ப விலை ரூ.20,000 இருக்கும். இது ரேம், ரோம் அடிப்படையில் மாறுபாடு இருக்கும். எனவே, இந்த அசத்தலான மொபைலுக்காக விவோ ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Read More – முதல் முறையாக புதிய கார் வாங்க போறீங்களா? இதோ உங்களுக்காக மூன்று கார்கள்!
Vivo T3 5G: எதிர்பார்க்கும் அம்சங்கள்:
- 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் 6.67-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளே.
- MediaTek Dimensity 7200 SoC சிப்செட் மற்றும் Funtouch OS 14 (Android 14) மூலம் இயக்கப்படுகிறது.
- 8ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+256ஜிபி உட்பட இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
- 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி.
- அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்.
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்காக IP54 சான்றளிக்கப்பட்டது.
- காஸ்மிக் ப்ளூ மற்றும் கிரிஸ்டல் ஃப்ளேக் உட்பட இரண்டு கலர்களில் வெளிவருகிறது.