மாஸ் காட்டும் ரியல்மி.. ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC உடன் நியூ போன்.. இந்தியாவில் எப்போது?
Realme GT 7 Pro இந்தியாவில் முதல் ஸ்னாப்டிராகன் 8 எலைட்-இயங்கும் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட உள்ளது
சென்னை : சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி நிறுவனம் (Realme) குவால்காமின் Snapdragon 8 Elite அம்சம் கொண்ட மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்பதை இறுதியாக உறுதி செய்துள்ளது.
ஆம், இந்த மொபைல் அடுத்த மாதம் (நவம்பர்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் Realme GT 7 Pro போன், Amazon மற்றும் ரியல்மி ஸ்டோர்களில் கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Power that sets new benchmarks! 🚀
Introducing India’s first Snapdragon® 8 Elite in the upcoming #realmeGT7Pro. Brace yourselves for a next-gen experience, launching this November on @amazonIN.🔥#GT7ProFirst8EliteFlagship #DarkHorseofAI #ExploreTheUnexplored #amazonIndia pic.twitter.com/7JYa8VLuSP
— realme (@realmeIndia) October 21, 2024
அதன்படி, அறிமுகம் செய்யப்படவிருக்கும் ஜிடி 7 ப்ரோ, டாப்-ஆஃப்-லைன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் ரியல்மி தெரிவித்துள்ளது.
இதனிடையே, ASUS, HONOR, iQOO, OnePlus, OPPO, Realme, Samsung, Vivo மற்றும் Xiaomi உள்ளிட்ட ஸ்மார்ட்போன் பிராண்டுகள் வரும் நாட்களில் Snapdragon 8 Elite SoC உடன் தங்களது மொபைல் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ சிறப்பம்சம் என்ன?
GT 7 Proக்கான அதிகாரப்பூர்வ அம்சங்கள் குறித்த விவரத்தை Realme வெளியிடவில்லை என்றாலும், சில தகவல்கள் கசிந்துள்ளது. GT 7 Proக்கான அதிகாரப்பூர்வ அம்சங்கள் குறித்த விவரத்தை Realme வெளியிடவில்லை என்றாலும், சில தகவல்கள் கசிந்துள்ளது.
அதன்படி, ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜர் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், 50MP சோனி IMX 906 முதன்மை சென்சார் கேமரா, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 50MP டெலிஃபோட்டோ கேமரா (Sony IMX 882) உடன் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதன் விலை ரூ.55,000 முதல் ரூ. நாட்டில் 60,000 வரை இருக்க கூடும் என சொல்லல்படுகிறது. அது மட்டுமல்லாமல், பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் பொருத்தப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.