இன்ஸ்டாவை மிஞ்சிய வாட்ஸ்அப்..! இந்த அம்சம் இங்கும் வரப்போகுது!

இன்ஸ்டாகிராமில் இல்லாத ஒரு வசதியை மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

whatsapp instagram

சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, ஒருவர் ஸ்டேட்டஸ் வைக்கிறார் என்றால் அவருடைய ஸ்டேட்டஸ் நமக்குப் பிடித்திருந்தது என்றால் லைக் செய்து கொள்ளும் வசதியைக் கொண்டு வந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வேறொரு, அட்டகாசமான வாட்ஸ்அப் அப்டேட்டை கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன அப்டேட் என்றால் அதுவும் ஸ்டேட்டஸ் வைப்பவர்களைக் குஷி படுத்தும் அப்டேட் தான். வழக்கமாக ஸ்டேட்டஸ் வைக்கும்போது பலரும் கீழே யாருக்காக வைக்கிறோம் என்பதை எழுத்து மூலமாகவோ அல்லது நாம் வைக்கும் வீடியோக்கள் மூலமாகவோ தெரியபடுத்துவோம்.

ஆனால், மெட்டா கொண்டுவரவுள்ள புதிய அப்டேட் வந்தவுடன் இனிமேல் நாம் யாருக்கு ஸ்டேட்டஸ் வைக்கிறமோ அவர்களுடைய பெயரை டேக் செய்து ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளலாம். நாம் டேக் செய்வது யாருக்கும் தெரியாது. நாம் டேக் செய்தவருக்கு மட்டுமே தெரியும் அளவுக்குச் சிறப்பான அப்டேட் கொண்டு வருவதற்கான வேலையில் தான் தற்போது மெட்டா ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற அம்சங்கள் இன்ஸ்டாகிராமில் இருந்தால் கூட, இன்ஸ்டாகிராமில் நாம் ஒருவருக்கு ஸ்டோரி வைக்கிறோம் என்றால் அவர்களுடைய பெயரை டேக் செய்தால் அந்த பெயர் மற்றவர்களுக்குக் காட்டும். எனவே, இது போன்று இல்லாமல் வாட்ஸ்அப் சற்று வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக மெட்டா அதிரடியான அப்டேட்டை கொண்டு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஒரு அப்டேட் எப்போது வரும் எனப் பயனர்கள் காத்துள்ள நிலையில், இந்த அசத்தலான அம்சம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அதனை அடுத்த அப்டேட்டாக மெட்டா கொண்டு வந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
tamilisai soundararajan
kantara chapter 1
seeman
Thiruvalluvar - TN CM MK Stalin
donald trump dance
Instagram Reels