ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

வாட்ஸ்அப் திடீரென முடங்கிய நிலையில் பயனர்கள் X தளத்தில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.

whatsapp down

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு மெசேஜ் அனுப்பும் போது அந்த மெசேஜ் போகவில்லை எனவும் சிலர் புகைப்படங்கள் அனுப்பும் போது இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் ஸ்டேட்டஸ் (Status) பதிவிட முடியவில்லை என்றும் புகார்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சிக்கல் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பல பயனர்களை பாதித்துள்ளது. இந்த சிக்கல் மாலை 5 மணி முதல் (IST) தொடங்கியதாகவும், உலகளவில் பல நாடுகளில் இதே பிரச்சினை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், இந்தியாவில் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் பயனர்கள் இந்த சிக்கலை அதிகளவில் பதிவு செய்துள்ளனர். டவுன்டிடெக்டர் (Downdetector)- இணையத்தளத்தில் கொடுக்கப்பட்ட தகவலின் படி, இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் சிக்கலைப் புகார் செய்துள்ளனர்.

மாலை 6 மணி நிலவரப்படி, சுமார் 10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. அதில், 65% பயனர்கள் மெசேஜ் அனுப்புவதில் சிக்கலை சந்தித்ததாகவும், 20% பயனர்கள் செயலியில் இணைப்பு (Server Connection) பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், 15% பயனர்கள் ஸ்டேட்டஸ் பதிவிடுவது உள்ளிட்ட பிற சிக்கல்களை சந்தித்ததாகவும் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக புகார்கள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் பயனர்கள் இந்த சிக்கலை சந்தித்துள்ளனர். மேலும், மெட்டா நிறுவனம் இந்த சிக்கல் குறித்து உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், “சில பயனர்கள் தற்போது சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்பதை நாங்கள் பார்த்தோம். எல்லோருக்கும் 100% சேவையை மீட்டெடுக்க  வேலை செய்து பயனர்கள் சிக்கலை தீர்ப்போம்” எனவும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் சேவை தடைபட்டதை அடுத்து, பயனர்கள் X தளத்தில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. சில பயனர்கள் இது தொடர்பாக நகைச்சுவையான மீம்ஸ்களையும் (Memes) பகிர்ந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்