வாட்ஸ்ஆப்(Whatsapp) சீக்ரெட்ஸ் .! உங்களுக்கு தெரியுமா.?
ப்ளூ-டிக்ஸ் மறைப்பு உட்பட பலருக்கும் தெரியாத 5 வாட்ஸ்ஆப் சீக்ரெட்ஸ்.!
வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் இல்லாத நபர்களே இல்லை தற்போது. ஒரு மிகச்சிறிய காலகட்டத்தில் மிகப்பரவலான முறையில் வளர்ந்த செய்தி பயன்பாடான வாட்ஸ்ஆப்பில், இன்னும் கூட நமக்கு தெரியாத பல ரகசியமான அம்சங்கள் ஒளிந்து கிடக்கிறது.
மாதத்திற்கு சுமார் 1.5 பில்லியன் அளவிலான ‘ஆக்டிவ்’ பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் நம் கண்களுக்கு புலப்படாத 5 இரகசிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது.
05: வாட்ஸ்ஆப்பில் இருந்துகொண்டே யூட்யூப் பார்ப்பது எப்படி.?
வாட்ஸ்ஆப்பின் சமீபத்திய அப்டேட் பதிப்பில், பயன்பாட்டை விட்டு வெளியேறாமலேயே யூட்யூப் வீடியோக்களை பார்க்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சம் இணைக்கப்பட்டது.
அதாவது இந்த அம்சம், பயனர்களை வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே வீடியோக்களை நேரடியாக பார்க்க அனுமதிக்கும். முன்னர் யூட்யூப் வீடியோக்களை பார்க்க வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இனி அதற்கு அவசியமில்லை.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், வாட்ஸ்ஆப் வழியாக பகிரப்படும் யூட்யூப் இணைப்பை தொடவும், உடனே அந்த வீடியோ கிளிப் ஆனது ஒரு மிதக்கும் சாளரத்தில் துவக்கப்படும். அவ்வளவு தான். இது தவிர, நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் சாட்டை மாற்றினாலும் கூட, வீடியோவானது தொடர்ந்து பிளே ஆகும்.இது ஒரு புது அம்சம்.
04: வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல்.!
வாட்ஸ்ஆப், சமீபத்தில் இந்தியாவில் அதன் யூபிஐ அடிப்படையிலான பணம் செலுத்தும் அம்சங்களை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் (WhatsApp Payments) சேவையின் வாயிலாக அனுப்பப்படும் பணமானது நேரடியாக பெறுபவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த புதிய அம்சத்தை சாட் விண்டோவில் மற்றும் இணைப்பு விருப்பங்கள் மெனுவில் – வீடியோ, தொகுப்பு, ஆவணங்கள் மற்றும் பிற விருப்பங்கலுடன் – காணலாம். பேமெண்ட்ஸ் விருப்பத்தை கிளிக் செய்த பின், ஒரு நிபந்தனை சாளரம் வங்கிகளின் பட்டியலை காட்டும். அதிலொரு தேர்வை நிகழ்த்திய பின்னர் அங்கீகார பின் (authentication pin) ஒன்றை உருவாக்க வேண்டும்.இது வாட்ஸ்ஆப் பயன் படுத்துவோரிடன் வரவேற்பை பெற்றது.
உங்களிடம் யூபிஐ கணக்கு இல்லை என்றால் யூபிஐ பயன்பாட்டினை அல்லது உங்களுடைய வங்கியின் வலைத்தளம் / பயன்பாட்டை கொண்டு யூபிஐ அக்க்கவுண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும். அதன் வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் ஆனது பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் போன்ற காரியங்களை, மிக எளிமையான முறையின்கீழ் நிகழ்த்த உதவும்.
03: ப்ளூ டிக்ஸ் குறியீட்டை மறைப்பது.!
வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்ட ஒரு செய்தி படிக்கப்படும் போது, அவைகள் நீலநிற குறியீட்டால் அடையாளம் காண்பிக்கப்படும் என்பதை நாம் நன்கு அறிவோம். அதை மறைக்க?
வாட்ஸ்ஆப்பில் செட்டிங்ஸ் > அக்கவுண்ட் > பிரைவசி உள்நுழைந்து ரீட் ரெசிப்ட்ஸ் (Read Receipts) விருப்பத்தை தட்டவும். இவ்வாறு செய்வதன் மூலம் முதலில், உங்களின் மெசேஜை உங்கள் நண்பர் எப்போது படித்தார் என்பதை கண்டறிய உதவும் ப்ளூ-டிக்ஸ் திறனை இழப்பீர்கள். பின்னர் உங்களின் நண்பர்களும் நீங்கள் எப்போது அவர்களின் மெசேஜை படித்தீர்கள் என்பதை கண்டறிய உதவும் ப்ளூ டிக்ஸ் திறனை இழப்பார்கள்.
இது தவிர, ஒரு குறிப்பிட்ட நபரின் செய்தியை படிக்க வேண்டும் ஆனால் ப்ளூ டிக்ஸ் ஏற்பட கூடாது என்கிற நிலைப்பாட்டில், நீங்கள் ஏர்பிளேன் மோட்’தனை ஆக்டிவேட் செய்துவிட்டு குறிப்பிட்ட நபரின் மெசேஜை படித்துவிட்டு, வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறிடலாம். இந்த பயன்முறையின் போது ஏர்பிளேன் மோட்தனை ஆப் செய்யும் முன்னர் வாட்ஸ்ஆப் பயன்பாட்டை க்ளோஸ் செய்ய மறவாதீர்கள்.
02: ‘அன்சென்ட்’ அல்லது ‘ரிமூவ்’ அம்சம்.!
வாட்ஸ்ஆப்பின் சமீபத்திய பதிப்பில் அனுப்பிய மெசேஜை திரும்பிப்பெறும் அல்லதுடெலிட் செய்யும் அம்சம் உருட்டப்பட்டது. முதலில் ‘அன்சென்ட்’ செய்வதற்கான காலம் 7 நிமிடங்கள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் தவறான நபருக்கு தற்செயலாக அனுப்பப்பட்ட செய்தியை நீக்க அனுமதிக்கும் இந்த அம்சமானது 4,096 விநாடிகள் அதாவது சுமார் 68 நிமிடங்கள் என்கிற கால அவகாசத்தை வழங்கும்படி திருத்தப்பட்டது.
வாட்ஸ்ஆப்பில் தவறாக அல்லது தவறுதலாக அனுப்பிய செய்தியை நீக்க, குறிப்பிட்ட மெசேஜை செலெக்ட் செய்து அதை வழக்கம்போல டெலிட் செய்யவும். டெலிட் செய்யும் முன்னர் ‘டெலிட் பார் ஆல்’ என்கிற விருப்பத்தை தட்டவும். அந்த விருப்பத்தைத் தட்டும்போது, செய்தி உங்கள் சாதனத்திலும், பெறுநரின் தொலைபேசியிலும் ஒரே நேரத்தில் மறைந்து விடும்.
01.ஸ்டார்டு மெசேஜ்களை பயன் முறை.!
இந்த ஸ்டார்டு மெசேஜ் அம்சத்தினை கொண்டு, பயனர்கள் குறிப்பிட்ட செய்திகளைப் பதிவு (புக்மார்க் செய்வது போல) செய்யலாம். பின்னர் தேவையான நேரத்தில் அதை எளிமையாக அணுகலாம். இதை சாத்தியமாக்க முதலில் ஒரு செய்தியை ஸ்டார்டு செய்ய தேர்வு செய்ய வேண்டும், பின்னர் மேலேயுள்ள வாட்ஸ்ஆப் சாட் விருப்பங்களில் உள்ள நட்சத்திர ஐகானை வெறுமனே டாப் செய்ய வேண்டும், அவ்வளவு தான்.
இப்படியாக சேமித்த மெசேஜ்களை அணுக, மெனு பொத்தானைத் தட்டுவதன் மூலம் ஸ்டார்டு மெசேஜ்களின் மொத்த பட்டியலும் காட்சிப்படும். ஒருவேளை தெரியாமல் மெசேஜ்தனை ஸ்டார்டு செய்துவிட்டால் மீண்டும் அதை டாப் செய்வதின் மூலம் அன்ஸ்டார்டு செய்யலாம். இதுபோன்ற டிப்ஸ் கட்டுரைகளுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெக் டிப்ஸ் பிரிவுடன் இணைந்திருக்கவும்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.