Whatsapp : இனி மற்ற ஆப்ஸ்க்கும் மெசேஜை அனுப்பலாம் ..! வந்தாச்சு புதிய அப்டேட் ..!

Whatsapp Update [file image]

Whatsapp : சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய, புதிய அப்டேட்களை அவ்வப்போது  கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்து பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த அதிரடி அப்டேட்டின் மூலம், பயனர்கள் இனிமேல் வாட்ஸ் ஆப் மூலம் வேறு இதர அரட்டை ஆப்ஸ்க்கும் செய்திகளை அனுப்பலாம்.

Read More :- தயவு செய்து இனி அதை செய்யாதீங்க… தங்கள் பயனர்களை எச்சரிக்கும் ஆப்பிள்!

புதிய அப்டேட் :

சிக்னல் அல்லது டெலிகிராம் போன்ற மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களுக்கும் செய்திகளை அனுப்ப முடியும். ஐரோப்பாவின் டிஜிட்டல் சந்தைச் சட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த அப்டேட்டை WhatsApp உருவாக்குகிறது. இது பெரிய நிறுவனங்களுக்கு இடையே தொடர்பு கொள்ள உதவும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறிகிறது.

Read More :- பாரத் மேட்ரிமோனி, ஷாதி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கும் கூகுள்

மேலும், ஒரு பயனிரிடம் டெலிகிராமும் (Telegram), ஒரு பயனிரிடம் வாட்ஸ் ஆப்பும் (Whatsapp) இருந்தால். இருவரும் செய்திகளை எளிதாக அவர்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் மூலமே பரிமாறி கொள்ளலாம். இந்த அப்டேட் ஆனது தற்போது, வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு 2.24.5.20 இல் வெளிவந்துள்ளதாகவும், வாட்ஸ்ஆப் பீட்டா 2.24.5.18 பதிப்பிற்குகாக வாட்ஸ் ஆப் பணியாற்றி வருகிறது என்றும் whatsapp தெரிவித்து உள்ளது.

Read More :- Paytm : வங்கியுடனான ஒப்பந்தங்களை நிறுத்துகிறது பேடிஎம் ..! அடுத்தகட்ட திட்டம் இதுதானா ..?

தற்போது, வெளியாகி உள்ள இந்த அப்டேட் ஒரு சில பயனர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பல பயனர்கள் இதனை வரவேர்த்துள்ளனர். மேலும், இந்த அப்டேட் வரும் வாரங்களில் அனைத்துப் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று whatsapp பயனர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்