போட்டோ மட்டுமல்ல இனி ஸ்டேட்டஸிலும் HD.! வாட்ஸஅப்பின் அசத்தல் அம்சம்.!
வாட்ஸ்அப்பில் நாம் நமது நண்பர்களுக்கு புகைப்படங்களை அதே தெளிவுடன் எச்டி குவாலிட்டியில் அனுப்புவதற்கு டாக்குமெண்ட் மூலமாக அனுப்புவோம். ஆனால் அதனை வாட்ஸ்அப் நிறுவனம் மேம்படுத்தி சாதாரணமாக அனுப்பினாலே புகைப்படங்கள் எச்டி குவாலிட்டியில் செல்லும் வகையில் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
கடந்த ஜூன் மாதம் அறிமுகமான இந்த அம்சத்தினால் நீங்கள் எந்த புகைப்படங்கள் அனுப்பினாலும் அதனை ஹெச்டி குவாலிட்டியில் உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியும். அதற்கு நீங்கள் எந்த போட்டோவை அனுப்ப விரும்புகிறீர்களோ அதனை கிளிக் செய்து மேலே இருக்கக்கூடிய வசதிகளில் ஹெச்டி என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்.
இனி மொபைல் நம்பர் தேவையில்லை.! அசத்தல் அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.!
அதில் இரண்டாவதாக உள்ளதை தேர்வு செய்ய வேண்டும். இதே போல வீடியோக்களையும் ஹெச்டியில் அனுப்பு அம்சமும் அறிமுகமானது இந்த இரண்டு அம்சமும் இரண்டு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு பயனர்களுக்குமே கிடைத்தது. இப்போது பயனர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் உயர்தர ஹெச்டி போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிடும் ‘ஹெச்டி ஸ்டேட்டஸ்’ (HDStatus) வசதியையும் கொண்டுவர உள்ளது
இந்த அம்சம் மூலம் தங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் ஸ்டேட்டஸில் வைக்க முடியும். தற்பொழுது இந்த ஸ்டேட்டஸ் அப்டேட் மேம்பாட்டில் உள்ளது. இது வரும் காலங்களில் பீட்டா பயனர்களுக்குக் கிடைக்கும். அதன் பிறகு இந்த ஸ்டேட்டஸ் எச்டி அம்சம் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வீடியோவுடன் சேர்த்து ஆடியோவையும் கேளுங்கள்.! வாட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்.!
இதற்கு முன்னதாக ஐஓஎஸ் பயனர்களுக்காக வீடியோ காலில் ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் பொழுது உங்கள் போனில் நீங்கள் பார்க்கும் வீடியோ மற்றும் அந்த வீடியோவுக்கான ஆடியோ ஆகிய இரண்டையும் உங்களுடன் காலில் இருப்பவர்களும் கேட்கவும் பார்க்கவும் கூடிய அம்சத்தை வெளியிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.