வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜூன் 16ம் தேதி ஐஓஎஸ் பயனர்களுக்காக ‘ஸ்கிரீன் ஷேரிங்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வீடியோ கால் செய்யும்பொழுது தங்களுடைய மொபைல் ஸ்க்ரீனை ஷேர் செய்ய முடியும். இதனால் உங்கள் மொபைலில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை உங்களுடன் வீடியோ காலில் இருக்கும் நபராலும் பார்க்க முடியும் கிட்டத்தட்ட இது ஒரு ஜூம் வீடியோ கால் செயலி போல இருக்கும்.
இதே ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் பயன்பாட்டில் உள்ளது. இத்தகைய அம்சத்தை இதோடு விடாமல் இன்னும் பல மாற்றங்களை வாட்ஸ்அப் மேற்கொண்டு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த அம்சத்தினால் நீங்கள் ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் பொழுது உங்கள் போனில் நீங்கள் பார்க்கும் வீடியோ மற்றும் அந்த வீடியோவுக்கான ஆடியோ ஆகிய இரண்டையும் உங்களுடன் காலில் இருப்பவர்களும் கேட்கவும் பார்க்கவும் முடியும். இது இந்த அம்சம் வீடியோ கால் அம்சத்தை மேம்படுத்தி ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்குகிறது. முன்னதாக ஸ்கிரீன்ஷாரின் செய்யும் பொழுது ஸ்கிரீனில் தெரியும் வீடியோவை மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் இந்த அம்சம் வெளிவந்தவுடன் அந்த வீடியோவுடன் இணைந்து அதற்கான ஆடியோவையும் கேட்க முடியும். அதோடு பாடல்களும் கேட்கலாம். இந்த அம்சமானது ஆடியோ கால் அல்லது வீடியோ காலில் வீடியோ ஆஃப் செய்யப்பட்ட நிலையில் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கால் செய்யும் பொழுது ஆடியோவை ஷேர் செய்வதற்கான இந்த அம்சம் தற்பொழுது மேம்பாட்டில் உள்ளது.
மேலும் இது வாட்ஸ்அப்பின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு கிடைக்கும். இது முதன்முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்காக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளபடி, இந்த அம்சம் iOS 23.25.10.72 என்ற பீட்டா வெர்சனல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை ஐஓஎஸ் பயனர்கள் டெஸ்ட் பிளைட் என்ற பயன்பாட்டின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…