ஆண்ட்ராய்டை அடுத்து ஐஓஎஸ்.! புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.!

Chat lock shortcut

வாட்ஸ்அப் நிறுவனம் நாளுக்கு நாள் அதன் செயலில் ஸ்டைல்ஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றை அறிமுகம் எய்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 18ம் தேதி சேட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது.

நீங்கள் ஒருவரிடம் ஏதேனும் ரகசியமாக பேசுகிறீர்கள் அல்லது நீங்கள் யாரிடம் பேசினாலும் அதை ஒருவரும் பார்த்துவிடக் கூடாது என்கிற பட்சத்தில், இந்த அம்சத்தைப் பயன்படுத்தி அந்த சேட்டை லாக் செய்ய முடியும். அந்த சேட்டை திறப்பதற்கு ஒரு பாஸ்வர்டையும் வைத்துக்கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் AI சாட் போட்.! மறைத்து வைக்க புதிய வசதி அறிமுகம்.!

இந்த அம்சம் முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக Android 2.23.22.4 என்கிற பீட்டா வெர்சனில் வெளியானது. இதையடுத்து அனைவர்க்கும் கிடைத்தது. அதே போல், இப்போது ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்காக இந்த அம்சம் வெளியாகியுள்ளது. இந்த அம்சத்தை அணுக ஐஓஎஸ் பயனர்கள் iOS 23.24.10.78 என்கிற வெர்சனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதில் இரண்டு ஷார்ட்கட்டுகள் உள்ளன. ஒன்று சேட்டிற்கு வெளியே இருந்தே, அந்த சேட்டை அழுத்தி பிடித்தால், சில அமைப்புகள் காட்டும். அதில் ‘லாக் சேட்’ என்பதை கிளிக் செய்து லாக் செய்யலாம். மற்றொன்று சேட்டிற்கு உள்ளே சென்று சேட் செட்டிங்சில் லாக் சேட் என்பதை கிளிக் செய்து லாக் செய்யலாம்.

மீண்டும் அறிமுகமான ‘View Once’ அம்சம்.! டெஸ்க்டாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்.!

டெஸ்ட்பிளையிட் பயன்பாட்டிலிருந்து ஐஓஎஸ்-கான இந்த வாட்ஸ்அப் பீட்டா வெர்சனை இன்ஸ்டால் செய்யும் பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கிறது. மேலும் இது வரும் நாட்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் அதன் டெஸ்க்டாப் பயனர்களுக்காக  ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு முறை மட்டுமே பார்க்க முடிவும். இவ்வாறு அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்களது மொபைல் கேலரியில் சேமித்து வைக்கவோ, ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்