புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்!

WhatsApp

WhatsApp : மூன்று பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தங்களது பயனர்களுக்கு புது புது அம்சங்களை அப்டேட்டுகள் மூலம் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி, சமீபத்தில், வாட்ஸ்அப் chat search feature என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது உரையாடல்களை தேதி வாரியாக பார்க்க முடியும்.

Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது!

இதையடுத்து, வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள் ப்ரொஃபைல் பிக்ச்சரை (full profile picture) ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை விதிக்கும் அம்சத்தையும் கொண்டுவந்தது. தனியுரிமை பாதுகாப்பு காரணமாக இந்த அம்சம் கொண்டுவரப்படுவதாகவும், ஆனால், profile view mode-வை ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Read More – இந்தியாவில் Vivo T3 5G எப்போது அறிமுகம்? எதிர்பார்க்கும் சிறப்பசங்கள்.. காத்திருக்கும் ரசிகர்கள்..

இந்த வரிசையில் மற்றொரு புதிய அப்டேட்டை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். அதாவது, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் ஒருவரை மென்ஷன் செய்வது போல, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அம்சம் மூலம் குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும்போது Notification அவர்களுக்கு செல்லும். எனினும், இதற்கான privacy விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Read More – இனி டெக்ஸ்ட் to வீடியோ… விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!

எனவே, வாட்ஸ் அப் பயனர்கள் தங்கள் அப்டேட்டுகளில், தங்கள் தொடர்பில் இருப்பவர்களை நேரடியாக மென்ஷன் செய்ய முடியும் என்பது முக்கியமான நபர்களுடனான தொடர்புகளை மேம்படுத்த உதவும் என்றுள்ளனர். இந்த புதிய அப்டேட் முதலில் சோதனை முறையில் பீட்டா வெர்சனுக்கு அறிமுகப்படுத்தி, பின்னர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi