வாட்ஸ்அப்பில் AI சாட் போட்.! மறைத்து வைக்க புதிய வசதி அறிமுகம்.!

WhatsApp meta ai

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப், அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் சேனல் போன்றவற்றை அறிமுகம் செய்தது.

தற்போது இந்த அம்சங்களுடன் சேர்த்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கக்கூடிய மெட்டா ஏஐ அசிஸ்டென்ட் (AI-powered chats) எனப்படும் சாட் பாட்டை கடந்த 17ம் தேதி அறிமுகம் செய்தது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, மெட்டாவின் பல தளங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

5,400mAh பேட்டரி..1 டிபி ஸ்டோரேஜ்.! ஒன்பிளஸ் 12-ன் அறிமுக தேதி இதுதான்..?

இந்த ஏஐ சாட் பாட்டை அனுகுவதற்கு சேட் பக்கத்தில் வண்ணமயமான மற்றும் பயனர்களின் கண்ணை கவரும் வகையில் ஒரு ஷார்ட்கட் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஷார்ட் கட், மெசேஜ் ஐகானுக்கு மேலே வட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிளிக் செய்தவுடன் பயனர்களுக்கு பல சிறப்பான அனுபவங்களை வழங்கும் ஏஐ சாட் பாட்டின் வரவேற்பு உரை தோன்றும்.

இதன்பிறகு அதில் உரையாடலை தொடங்கலாம். இந்த அம்சம் முன்னதாக ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்குக் கிடைத்தது. இந்த அம்சத்தை அணுக ஐஓஎஸ் பயனர்கள் வாட்ஸ்அப் வெர்சன் 23.23.10 ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் 2.23.24.26 என்ற வெர்சனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இனி இதற்கும் கூடுதல் கட்டணம்.! கூகுள் பே செயலால் வருந்தும் பயனர்கள்.!

இப்போது இந்த சாட்டை மறைப்பதற்கான ஒரு அம்சத்தையும் வாட்ஸ்அப் வெளிட்டுள்ளது. இதனை அணுக உங்கள் வாட்ஸஅப்பின் செட்டிங்ஸை திறக்க வேண்டும். பிறகு அதில் சேட்ஸ் என்பதை கிளிக் செய்து உள்ளே சென்றால், ஃபாண்ட் சைஸ் என்பதற்கு கீழே ஷோ மெட்டா ஏஐ என்ற பட்டன் இருக்கும். இதை பயன்படுத்தி சேட் பக்கத்தில் தெரியும் ஏஐ சாட் பாட்டை ஆஃப் செய்ய முடியும்.

இந்த அம்சம் சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும் இது வரும் நாட்களில் மேலும் பலருக்குக் கிடைக்கும். வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து இந்த ஏஐ சாட் பாட் அம்சம் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் சமீபத்திய தயாரிப்பான ரே-பான் மெட்டா ஸ்மார்ட்கிளாஸ் உட்பட அனைத்து தளங்களிலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy