இனி சாட்களுக்கு இரட்டிப்புப் பாதுகாப்பு.! வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அம்சம்.!
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கும் நோக்கில், சேட்களுக்கு “சீக்ரெட் கோட்” (Secret Code) எனும் அம்சத்தை வெளிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 18ம் தேதி சாட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான “சாட் லாக்” (Chat Lock) அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்தி உங்களுடைய தனிப்பட்ட முக்கியமான சாட்களை லாக் செய்ய முடியும். மீண்டும் அதனை திறக்க உங்கள் கைரேகை அல்லது போனின் பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் யாராவது உங்கள் போனில் இருக்கும் அவர்களது கைரேகை அல்லது உங்களின் கைரேகையை வைத்து, லாக் செய்யப்பட்ட சாட்டை பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டை அடுத்து ஐஓஎஸ்.! புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.!
இதனால் சாட் லாக் அம்சத்தை மேம்படுத்தும் நோக்கில், தற்போது சீக்ரெட் கோட் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் நீங்கள் லாக் செய்து வைத்துள்ள சாட்களுக்கு பிரத்யேகமாக சீக்ரெட் கோட் ஒன்றை செட் செய்து, அந்த சேட்களுக்கு இரட்டிப்புப் பாதுகாப்பு வழங்கலாம். இதனால் உங்கள் போனை நண்பர்களிடம் கொடுக்கும்போது பயமில்லாமல் இருக்க முடியும்.
இந்த சீக்ரெட் கோடை உருவாக்க சொற்கள் அல்லது ஈமோஜிகளைப் பயன்படுத்தலாம். மேலும், இந்த சீக்ரெட் கோட் மூலம் லாக் செய்யப்படும் சேட்கள் அனைத்தும் மெயின் சாட் லிஸ்டில் காட்டப்படாது. இதனைக் கண்டுபிடிக்க நீங்கள் உருவாக்கிய சீக்ரெட் கோடை வைத்து சர்ச்சில் தேட வேண்டும். அப்போது அந்த சாட் உங்களுக்கு காட்டப்படும். சாட்டை லாக் செய்யும் போது அதனை மறைக்கவா? வேண்டாமா? என்பதை நீங்களே தேர்வு செய்யலாம்.
இந்த புதிய அப்டேட் இன்று முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என அனைத்து பயனர்களுக்குக் கிடைக்கிறது. எனவே, அனைத்து பயனர்களையும் சென்றடைய நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் செயல்படாத கணக்குகளை நீக்கத் தொடங்கும் கூகுள்.!
எப்படி செயல்படுத்துவது.?
- இந்த அம்சத்தை செயல்படுத்த நீங்கள் லாக் செய்ய விரும்பும் சாட்டை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு அந்த சேட்டை லாக் செய்தவுடன், மெயின் சாட் பாக்ஸிற்கு வந்து கீழே இழுக்கவும்.
- அதில் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, சாட் லாக் செட்டிங்ஸை திறக்க வேண்டும்.
- அதில் ‘பூட்டிய சேட்களை மறை’ (Hide Locked Chat) என்பதை தேர்வு செய்யவும்.
- பிறகு கீழே உள்ள ‘ரகசிய குறியீட்டை உருவாக்கு’ (Creat Secret Code) என்பதை கிளிக் செய்து, ஒரு சொல் அல்லது ஈமோஜியைப் பயன்படுத்தி உங்கள் ரகசியக் குறியீட்டை உருவாக்க வேண்டும்.