புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய போகும் வாட்ஸ் ஆப் ..! என்ன தெரியுமா ..?
உலகில் உள்ள அதிக நபர்களால் உபயோகபடுத்தப்படும் சமூக செயலியிகளில் முன்னிரிமை பெற்றது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் ஆகும். வாட்ஸ் ஆப் தங்களது பயனர்களை கவரும் வகையில், புது புது அப்டேட்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் கூட வாட்ஸ் ஆப், சேட்டை (Chats) லாக் செய்யும் அப்டேட்டை வெளியிட்டது. அதே போல, வாட்ஸ் ஆப் செயலியில் புது வித அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட உள்ளது.
இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள கணக்குகள் நீக்கம்
வாட்ஸ் ஆப்பில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட் ட்ரே (Redesigned Status Update Tray) எனப்படும் புதிய அப்டேட்டை தற்போது வெளியிட உள்ளது. இந்த அப்டேட் மூலம் நமது நண்பர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை வெளியிலிருந்து கொண்டே சிறுபடத்தை (Thumbnail) பார்க்க உதவி செய்கிறது மேலும், வாட்ஸ் ஆப் சேனல்கள் மற்றும் வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸ்கள் இரண்டையும் ஒரே டேபிலிருந்து பயனர்களால் கையாள முடியும்.
இதன் மூலம் நாம் எளிதாக நமது நண்பர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை பார்க்கலாம். இந்த அப்டேட்டை மெட்டா நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்டு 2.24.2.23க்கான வாட்ஸ் அப் பீட்டாவில் சோதனை கட்டத்தில் வைத்துள்ளனர். இந்த அப்டேட் கூடிய விரைவில் நிலையான ஆப்பில் வரும். மேலும், இது முதலில் ஆண்ட்ராய்டுக்கும் அதன் பின் iOS க்கும் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் ஆப் பயனர்கள் ஒரு சிலர் இந்த அப்டேட்டை ரசிக்கவில்லை என்றாலும் பலரும் வரவேரற்த்துள்ளனர். இது தவிர ஆண்ட்ராய்டு, iOS, வெப் (Web) மற்றும் வின்டோஸ் (Windows) க்கான பீட்டா பயன்பாட்டிற்கான கூடுதல் புதிய அம்சங்களை வாட்ஸ் அப் தொடர்ந்து சோதித்து கொண்டே வருகிறது.