அசத்தல் அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்..! இன்ப அதிர்ச்சியில் பயனர்கள்..!
வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அம்சத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த அம்சமானது ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல் போன்களில் பயன்படுத்துவது ஆகும்.
இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களது மொபைலில் உள்ள வாட்ஸ்அப்பை, இணையதளம், டேப்லெட்டுகள் மற்றும் டெஸ்க்டாப்கள் போன்ற நான்கு கூடுதல் சாதனங்களில் இணைக்கலாம். மேலும் உங்களது முதன்மை சாதனத்தில் (மொபைல் போன்) உள்ள வாட்ஸ்அப் நீண்ட காலத்திற்கு செயலில் இல்லாமல் இருந்தால், அந்த கணக்கு இணைக்கப்பட்ட மற்ற துணை சாதனங்களிலிருந்தும் தானாகவே வெளியேறிவிடும்.
இந்த புதுப்பிப்பு உலகில் உள்ள சில பயனர்களுக்கு மட்டுமே வந்துள்ளது, வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் வரும் வாரங்களில் துணை சாதனங்களுடன் இணைப்பதற்கான மாற்று வழியை அறிமுகப்படுத்துவதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதில் கியூ.ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதை தவிர, மொபைல் எண்ணை வாட்ஸ்அப் இணையத்தில் உள்ளிட்டு வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்.