வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு செய்தி அனுப்ப எளிமையாக இருக்கும் வகையில் ‘யுசர் நேம்’ (User Name) என்கிற அம்சத்தை மேம்படுத்தி வருகிறது. இந்த யூசர் நேம் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் மொபைல் நம்பரை மற்றவருக்கு பகிராமல் ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பும் அம்சத்தை உருவாக்கி வருகிறது.
இந்த அம்சம் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் உள்ளது. குறிப்பாக இதே போன்று மொபைல் நம்பரை பகிராமல் வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் அம்சம் எக்ஸ்-ல் (ட்விட்டர்) உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக பீட்டா வெர்ஷன் 2.23.25.19 -இல் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் யூசர் நேம் பயன்படுத்தி மற்றவர்களுக்கு மெசேஜ் செய்து கொள்ளலாம். உங்களுடைய மொபைல் எண் அவர்களுக்கு காட்டப்படாது. இதனால் உங்களின் பாதுகாப்பு என்பது மேம்படுத்தப்படும். இந்த அம்சம் தற்பொழுது ஆண்ட்ராய்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படவில்லை. விரைவில் இந்த அம்சம் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மெட்டா நிறுவனம் அதன் தயாரிப்புகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகிறது. அதன் முயற்சியாக இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.
முன்னதாக, சாட் லாக் (Chat Lock), வியூ ஒன்ஸ் (View Once) என்கிற பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதோடு உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எச்டியில் அனுப்பும் அம்சமும் அறிமுகமானது. ஆனால் இந்த அம்சம் ஐஓஎஸ் பயனர்களுக்கு பீட்டா வெர்சனில் மட்டுமே கிடைத்தது.
இப்போது இந்த அம்சம் ஐஓஎஸ் பயனர்களுக்காக வெளிட்டபட்டுள்ளது. இதனை பயனர்கள் iOS 23.24.73 என்கிற வாட்ஸ்அப் வெர்சனை பதிவிறக்கம் செய்து பெறலாம்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…