இனி மொபைல் நம்பர் தேவையில்லை.! அசத்தல் அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.!

WhatsApp Username

வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு செய்தி அனுப்ப எளிமையாக இருக்கும் வகையில் ‘யுசர் நேம்’ (User Name) என்கிற அம்சத்தை மேம்படுத்தி வருகிறது.  இந்த யூசர் நேம் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் மொபைல் நம்பரை மற்றவருக்கு பகிராமல் ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பும் அம்சத்தை உருவாக்கி வருகிறது.

இந்த அம்சம் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் உள்ளது. குறிப்பாக இதே போன்று மொபைல் நம்பரை பகிராமல் வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் அம்சம் எக்ஸ்-ல் (ட்விட்டர்) உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக பீட்டா வெர்ஷன் 2.23.25.19 -இல் கொடுக்கப்பட்டுள்ளது.

இனி சாட்களுக்கு இரட்டிப்புப் பாதுகாப்பு.! வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அம்சம்.!

நீங்கள் யூசர் நேம் பயன்படுத்தி மற்றவர்களுக்கு மெசேஜ் செய்து கொள்ளலாம். உங்களுடைய மொபைல் எண் அவர்களுக்கு காட்டப்படாது. இதனால் உங்களின் பாதுகாப்பு என்பது மேம்படுத்தப்படும். இந்த அம்சம் தற்பொழுது ஆண்ட்ராய்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படவில்லை. விரைவில் இந்த அம்சம் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மெட்டா நிறுவனம் அதன் தயாரிப்புகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகிறது. அதன் முயற்சியாக இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.

மீண்டும் அறிமுகமான ‘View Once’ அம்சம்.! டெஸ்க்டாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்.!

முன்னதாக, சாட் லாக் (Chat Lock), வியூ ஒன்ஸ் (View Once) என்கிற பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதோடு உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எச்டியில் அனுப்பும் அம்சமும் அறிமுகமானது. ஆனால் இந்த அம்சம் ஐஓஎஸ் பயனர்களுக்கு பீட்டா வெர்சனில் மட்டுமே கிடைத்தது.

இப்போது இந்த அம்சம் ஐஓஎஸ் பயனர்களுக்காக வெளிட்டபட்டுள்ளது. இதனை பயனர்கள் iOS 23.24.73 என்கிற வாட்ஸ்அப் வெர்சனை பதிவிறக்கம் செய்து பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi