இனிமே இந்த கவலை இல்லை! நீண்ட நாள் பிரச்சனைக்கு வாட்ஸ்அப் கொண்டு வந்த தீர்வு!

சென்னை : வாட்ஸ் அப் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வந்து இருக்கிறது.
உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் பயணர்களுக்கு அட்டகாசமான பல அப்டேட்டுகளை கொண்டு வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது ‘Delete For Me’ என்ற அசத்தலான அப்டேட்டை கொண்டு வந்து இருக்கிறது. இந்த அப்டேட் மூலம் என்ன பலன் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு தெரிகிறது.
நம்மில் பலரும் தவறுதலாக யாருக்காவது மெசேஜ் செய்துவிட்டோம் என்றால் அவர்கள் பார்த்துவிடுவதற்கு முன்பு அந்த மெசேஜை நீக்க வேண்டும் என்று யோசித்து Delete For Everyone கொடுப்பதற்கு பதிலாக Delete For me என்பதை கொடுத்துவிடுவோம். இதனால் நமக்கு அந்த மெசேஜ் அழிந்துவிடும். ஆனால், நாம் அனுப்பியவருக்கு அழியாமல் இருக்கும்.
இதனால, அவர் நாம் அனுப்பிய தவறுதலான மெசேஜ் கூட பார்த்துவிடுவார்கள். இதன் காரணமாக நமக்கு பெரிய தலைவலியை வந்துவிடும் என்று கூட சொல்லலாம். ஆனால், இனிமேல் ஒரு மெசேஜை நீங்கள் Delete For Everyone கொடுப்பதற்கு பதிலாக Delete For me என்பதை கொடுத்தால் கூட நாம் அந்த மெசேஜை திரும்பி எடுத்துக்கொள்ளலாம்.
மெட்டா நிறுவனம் கொண்டு வந்து இருக்கும் ‘Delete For Me’ என்ற அசத்தலான அப்டேட்டின் மூலம் இனிமேல் நீங்கள் Delete For me என்பதை கொடுத்தால் கூட அதனது undo செய்துகொள்ளும் அம்சத்தை கொண்டு வந்து இருக்கிறது. எனவே, இனிமேல் எந்த கவலையும் இல்லாமல் தவறுதலாக Delete For me செய்து கொண்டால் கூட நீங்கள் undo செய்து கொள்ளலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025