வாட்ஸ்ஆப்பில் வந்துவிட்டது புதிய அப்டேட்…!
வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுக்களை செய்து வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை செய்து தந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போதைய புதிய அப்ட்டேட்டில் வாட்ஸ் அப் செய்திகளின் தேதி குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்ஆப் உரையாடலில் வலது பக்கத்தில் சேட் செய்த தேதி குறித்த தகவல் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த தகவலின் மூலம் அந்த சேட் என்றைக்கு எந்த தேதியில் உருவானது என்பதை பயனாளிகள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் இந்த நிலையில் ஒருசிலருக்கு இந்த தேதிகள் சரியாக காண்பிக்காது.
சில டெக்னிக்கல் காரணங்களால் ஏற்படும் இந்த பிரச்சனையால் நாம் சேட் செய்த தேதி குறித்த தகவல் இருக்காது, அல்லது தவறான தேதி இருக்கும்.
இந்த பிரச்சனை முதலில் ஒரு சிலருக்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனையை பல வாட்ஸ் அப் பயனாளிகள் சந்தித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனையால் வாட்ஸ் அப் பயனாளிகள் மிகுந்த அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். வாட்ஸ்ஆப் செயலியில் இந்த தேதி பிரச்சனை இருந்து வந்த போதிலும் வாட்ஸ் அப் மற்றும் பயனாளிகளின் ரெகுலர் பயன்பாடு அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.
இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, இதற்கு என்ன தீர்வு என்ன என்பது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் இன்னும் பதில் அளிக்கவில்லை. இருப்பினும் இந்த பிரச்சனைக்கு வாட்ஸ் அப் விரைவில் ஒரு நல்ல தீர்வினை தெரிவிக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் முதன்முதலில் பிசினஸ் பார்ட்னர்களான புக் மை ஷோ, நெட்ஃபிளிக்ஸ், மேக் மை டிரிப் ஆகியவற்றை அறிமுகம் செய்தது.