#Newupdate:வாட்ஸப்பில் வருகிறது கருத்துக்கணிப்பு ஆப்சன்

உலகில் அதிக பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் செய்தித்தளம் தனது செயலியில் கருத்துக்கணிப்பு கேட்கும் அப்டேட் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் செயலியானது தனது பயனர்களை ஈர்க்கும் வகையில் மேலும் ஒரு அப்டேட்டில் செயல்பட்டு வருகிறது. இதன்படி குரூப் சேட் களில் பயனர்கள் கருத்துக் கணிப்புகளை உருவாக்க முடியும், இதை 12 விருப்பங்கள் வரை இருக்கக்கூடும் என்றும், அப்டேட் வெளியிடப்படும் முன் இந்த மதிப்பு மாறலாம் என்று அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
நாங்கள் இந்த அப்டேட்டை தற்போது உருவாக்கிக்கொண்டிருக்கிறோம், எனவே இது வாட்ஸப் பீட்டா பயனர்களுக்கு தற்பொழுது கிடைக்காது என்றும் வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த அப்டேட்டிற்கான நுழைவுப்புள்ளி உங்களது வழக்கமான சேட் பக்கத்தில் இருக்கும், என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024