வாட்ஸ்ஆப்பில் வந்துவிட்டது புது அப்டேட் ..!
வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, தற்சமயம் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது இந்த அம்சம் புதிய பீட்டா (2.18.179) பதிப்பில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு மிக எளிமையாக கான்டாக்ட்களை சேமிக்க உதவுகிறது. தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிளிக் டூ சாட்’(Click to Chat) வசதியின் மூலம் உங்களின் கான்டேக்ட் லிஸ்டில் இல்லாத எண்களுக்கு கூட மெசேஜ் அனுப்ப முடியும். மெசேஜ் அனுப்பவேண்டியவரின் மொபைல் எண் தெரிந்தால் உடனடியாக உரையாடலை துவங்கலாம். ஆனால் அவரிடம் வாட்ஸ்ஆப் கணக்கு இருக்க வேண்டும். இல்லையெனில் வாட்ஸ்ஆப் சாட் செய்யமுடியாது.
வாட்ஸ்ஆப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் காணப்பட்டுள்ள இந்த அம்சமானது, வாட்ஸ்ஆப் வழியாக கிடைக்கும் மீடியாக்களை போன் கேலரியில் காட்சிப்படுத்தலாமா அல்லது வேண்டமா என்கிற அதிகாரத்தை பயனர்களுக்கு வழங்கும். அறியாதோர்களுக்கு, இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்ஆப் ஐஓஎஸ் பதிப்பில் உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
சமீபத்தில் காணப்பட்ட இந்த வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் அம்சத்தின் வழியாக, ஒரு பயனர் தனது அக்கவுண்ட் பற்றிய தகவல் அறிக்கையை கேட்கலாம். இந்த தகவலானது, உங்கள் செய்திகளைப் பற்றிய விவரங்களை எண்ட் டூ எண்ட் குறியாக்கத்தின் கீழ் பாதுகாக்க்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கோரிய மூன்று மூன்று நாட்களுக்குள் அறிக்கையை உருவாக்கம் பெற்று, அடுத்த சில வாரங்களுக்குள் அது பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.
வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை நாம் அறிவோம். அதனால் இந்த புதிய அம்சம் அறிமுகம் ஆவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது பயனர்களுக்கு ‘Send To Whatsapp’ விருப்பத்தின் மூலம் உடனடியாக ஒரு இணைப்பை பகிர அனுமதிக்கும்.