வாட்ஸ்அப்பை நம்ப முடியாது என்று டிவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பயனர் ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “நான் தூங்கிக்கொண்டு காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது எனது போனில் வாட்ஸ்அப் பின்னணியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதற்கான ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் வெளியீட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.
unknown nodeunknown nodeமேலும், பயனர் எழுப்பிய கேள்வியின் பதிவை பார்த்த வாட்ஸப் நிறுவனம் ” கடந்த 24 மணி நேரத்தில் புகார் செய்த அந்த பொறியாளரை தொடர்பு கொண்டுள்ளோம், அவர் பிக்சல் ஃபோன் மற்றும் வாட்ஸ் அப்பில் சிக்கலைப் எங்களிடம் பதிவு செய்துள்ளார்.
இது ஆண்ட்ராய்டில் உள்ள பிழை என நம்புகிறோம். இது அவர்களின் தனியுரிமை ( Privacy) டாஷ்போர்டில் உள்ள தகவலை தவறாகப் பண்படுத்துகிறது, மேலும் இது குறித்து விசாரித்து சரி செய்யுமாறு கூகுலிடம் கேட்டுள்ளோம்” என அந்த பயனருக்கு பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node